• May 20 2024

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லையா? ஹரீஸ் எம்.பி ஆதங்கம் samugammedia

Chithra / Nov 13th 2023, 10:07 am
image

Advertisement

 

மட்டக்களப்பில் விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவருக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. தேரரின் இந்தக் கருத்தை முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் வெட்கக்கேடாக நோக்குகிறது.

இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் தடைசெய்யப்பட வேண்டும்” - என்றார். 

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லையா ஹரீஸ் எம்.பி ஆதங்கம் samugammedia  மட்டக்களப்பில் விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவருக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. தேரரின் இந்தக் கருத்தை முஸ்லிம் சமூகமும், சிங்கள சமூகமும் வெட்கக்கேடாக நோக்குகிறது.இவ்வாறான வன்மமான பேச்சுக்கள் தடைசெய்யப்பட வேண்டும்” - என்றார். 

Advertisement

Advertisement

Advertisement