• Nov 14 2024

ஆஸ்திரியாவில் ஐ.எஸ் உடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பு அகற்றம்

Tharun / Jul 28th 2024, 3:56 pm
image

இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐ.எஸ் அமைப்பிற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பயங்கரவாத வலையமைப்பை ஆஸ்திரிய அதிகாரிகள் அகற்றி, ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரிய பாதுகாப்புப் படைகள் வியாழன் அன்று ஐந்து கூட்டாட்சி மாநிலங்களில் வீடுகளில் சோதனை நடத்தி, மொபைல் போன்கள், மடிக்கணினிகள், தரவு சேமிப்பு சாதனங்கள், கணிசமான அளவு பணம் மற்றும் ஒரு வாகனத்தை கைப்பற்றியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

23 மற்றும் 36 வயதுடைய ஒன்பது சந்தேக நபர்களும் செச்சென் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நீண்டகாலமாக ஐ.எஸ் ஆதரவாளர்களான சந்தேகநபர்கள் ஜேர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஐ.எஸ் அனுதாபிகளுடன் ஒத்துழைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது

ஆஸ்திரியாவில் ஐ.எஸ் உடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பு அகற்றம் இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐ.எஸ் அமைப்பிற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பயங்கரவாத வலையமைப்பை ஆஸ்திரிய அதிகாரிகள் அகற்றி, ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.ஆஸ்திரிய பாதுகாப்புப் படைகள் வியாழன் அன்று ஐந்து கூட்டாட்சி மாநிலங்களில் வீடுகளில் சோதனை நடத்தி, மொபைல் போன்கள், மடிக்கணினிகள், தரவு சேமிப்பு சாதனங்கள், கணிசமான அளவு பணம் மற்றும் ஒரு வாகனத்தை கைப்பற்றியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.23 மற்றும் 36 வயதுடைய ஒன்பது சந்தேக நபர்களும் செச்சென் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நீண்டகாலமாக ஐ.எஸ் ஆதரவாளர்களான சந்தேகநபர்கள் ஜேர்மனி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஐ.எஸ் அனுதாபிகளுடன் ஒத்துழைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement