• Oct 03 2024

இஸ்லாமாபாத் அதியுச்ச பாதுகாப்பில் - வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!!

Tamil nila / Jan 19th 2024, 9:46 pm
image

Advertisement

பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்து ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதால் இஸ்லாமாபாத் அதியுச்ச எச்சரிக்கையில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாத நடமாட்டம் உள்ள சில பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் பலியாகினர்.

தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ”பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.  

எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் இராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம்” என தெரிவித்திருந்தது.

 இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

நேற்று வியாழனன்று ஈரானில் உள்ள பிரிவினைவாத போராளிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, இஸ்லாமாபாத் உட்பட பல நகரகங்கள் அயுச்ச பாதுகாப்பில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்தே ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமாபாத் அதியுச்ச பாதுகாப்பில் - வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு. பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்து ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதால் இஸ்லாமாபாத் அதியுச்ச எச்சரிக்கையில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில் தீவிரவாத நடமாட்டம் உள்ள சில பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் பலியாகினர்.தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ”பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாதிகள் எங்களுக்கு எதிராக நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.  எனவே இந்த தாக்குதல் நடவடிக்கையை எடுப்பதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.அப்பாவி ஈரான் மக்களையோ, ஈரான் இராணுவத்தினரையோ குறிவைக்கவில்லை. ஈரான் எங்கள் சகோதர நாடு. அதன் மக்கள் மீது பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நோக்கமாக கொண்டுள்ளோம்” என தெரிவித்திருந்தது. இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.நேற்று வியாழனன்று ஈரானில் உள்ள பிரிவினைவாத போராளிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, இஸ்லாமாபாத் உட்பட பல நகரகங்கள் அயுச்ச பாதுகாப்பில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.பிரிவினைவாத பலூச் தீவிரவாதிகளை குறிவைத்தே ஈரானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement