• Nov 22 2024

கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது..! எம்.ஏ. சுமந்திரன்

Chithra / Jan 13th 2024, 7:57 am
image

 

கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் (12.01.2024) கட்சி உறுப்பினர்களை சந்தித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா சம்பந்தனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தீர்வை வழங்குவோம் என ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்த போது சாத்தியப்படாது என தீர்மானித்ததற்கு அமைய நான் எதிர்பார்த்தபடி ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது எனவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களை இரகசியமான முறையில் சந்திப்பதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கேட்டபோது திருகோணமலைக்கு வழக்கு ஒன்றிக்கு வந்தபோது மாவட்ட கட்சி ஆதரவாளர்களை சந்தித்து பேசியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் தலைவராக வருவேன் என யாராலும் எதிர் கூற முடியாது. எதிர்வரும் 27ஆம் திகதி தலைவராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கட்சியை கட்டுக்கோப்பாகவும் கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற பணிகளை தொடர்ச்சியாக செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது. எம்.ஏ. சுமந்திரன்  கட்சித் தலைவரை தெரிவு செய்ய வாக்களிப்பது சிறந்தது என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் (12.01.2024) கட்சி உறுப்பினர்களை சந்தித்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா சம்பந்தனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தீர்வை வழங்குவோம் என ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.இந்நிலையில், மீண்டும் கட்சி உறுப்பினர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்த போது சாத்தியப்படாது என தீர்மானித்ததற்கு அமைய நான் எதிர்பார்த்தபடி ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது எனவும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கட்சி ஆதரவாளர்களை இரகசியமான முறையில் சந்திப்பதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து கேட்டபோது திருகோணமலைக்கு வழக்கு ஒன்றிக்கு வந்தபோது மாவட்ட கட்சி ஆதரவாளர்களை சந்தித்து பேசியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நான் தலைவராக வருவேன் என யாராலும் எதிர் கூற முடியாது. எதிர்வரும் 27ஆம் திகதி தலைவராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கட்சியை கட்டுக்கோப்பாகவும் கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற பணிகளை தொடர்ச்சியாக செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement