• Nov 17 2024

சமய நடவடிக்கைகளை தடுப்பதும் குழப்புவதும் பொறுப்பற்ற செயல்; யாழ்.மாவட்ட சர்வமத பேரவை கண்டனம்..!!

Tamil nila / Mar 11th 2024, 9:57 pm
image

சமய விழுமியங்களை மதிக்கும் அறம் அவசியம் சமய நடவடிக்கைகள் தடுக்கப்படுவதும் குழப்பப்படுவதும் அர்த்தமற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள் இவை  நல்லிணக்கமான ஒரு நாடு உருவாக பெரிய தடை என யாழ் மாவட்ட சர்வ மத பேரவை தெரிவித்துள்ளது.

வெடுக்கு நாறிமலையில் நேற்று முன் தினம் இடம் பெற்றுள்ள பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து  அனுப்பியுள்ள  கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

08.03.2024 அன்று  வவுனியா வடக்கு வெடுக்கு நாறிமலையில் ஆதிசிவன்  ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டின் போது ஏற்பட்ட குழப்பம் மிகுந்த வேதனையை தருகிறது.

குழப்பம், பதற்றம், கைது, என்பவை இயல்பாக நடைபெற வேண்டிய சிவராத்திரி வழிபாட்டை பாதித்துள்ளது.  சமய உரிமைகளை மீறும் இச் செயற்பாட்டை யாழ் சர்வ மத பேரவையாக நாம் கண்டிக்கின்றோம்.

ஆண்டு தோறும் நடைபெறும் சிவராத்திரி வழிபாடு நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சைவ மக்களுடைய வழிபாடு உரிமையை மீறி உள்ளது.   இதனை சர்வ மத அமைப்பாக நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒவ்வொரு சமயங்களும் அந்தந்த சமயங்களுக்கே உரிய முறைப்படுத்தப்பட்ட  ஒழுங்குகளுடன் அவர்கள் முன்னெடுக்கும் வழிபாடுகள் மற்றும் கூட்டுறவு சார் நடவடிக்கைகளை மதிப்பதும் அவை சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதும் அனைவரதும் கடமை. 

சமய விழுமியங்களை மதிக்கும் அறம் அவசியம் சமய நடவடிக்கைகள் தடுக்கப்படுவதும் குழப்பப்படுவதும் அர்த்தமற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள் இவை நல்லிணக்கமான ஒரு நாடு உருவாக பெரிய தடை.

எனவே அரசு நீதிப்பொறிமுறையை பாவித்து உடனடியாக குழப்பத்தை ஏற்படுத்தியவருடைய பொறுப்பினத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வழிபாட்டுக்கு வந்து ஏற்பட்ட குழப்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இத்தகைய சமய உரிமை மீறல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்- என்றுள்ளது. 


 

சமய நடவடிக்கைகளை தடுப்பதும் குழப்புவதும் பொறுப்பற்ற செயல்; யாழ்.மாவட்ட சர்வமத பேரவை கண்டனம். சமய விழுமியங்களை மதிக்கும் அறம் அவசியம் சமய நடவடிக்கைகள் தடுக்கப்படுவதும் குழப்பப்படுவதும் அர்த்தமற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள் இவை  நல்லிணக்கமான ஒரு நாடு உருவாக பெரிய தடை என யாழ் மாவட்ட சர்வ மத பேரவை தெரிவித்துள்ளது.வெடுக்கு நாறிமலையில் நேற்று முன் தினம் இடம் பெற்றுள்ள பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து  அனுப்பியுள்ள  கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.08.03.2024 அன்று  வவுனியா வடக்கு வெடுக்கு நாறிமலையில் ஆதிசிவன்  ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டின் போது ஏற்பட்ட குழப்பம் மிகுந்த வேதனையை தருகிறது.குழப்பம், பதற்றம், கைது, என்பவை இயல்பாக நடைபெற வேண்டிய சிவராத்திரி வழிபாட்டை பாதித்துள்ளது.  சமய உரிமைகளை மீறும் இச் செயற்பாட்டை யாழ் சர்வ மத பேரவையாக நாம் கண்டிக்கின்றோம்.ஆண்டு தோறும் நடைபெறும் சிவராத்திரி வழிபாடு நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சைவ மக்களுடைய வழிபாடு உரிமையை மீறி உள்ளது.   இதனை சர்வ மத அமைப்பாக நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.ஒவ்வொரு சமயங்களும் அந்தந்த சமயங்களுக்கே உரிய முறைப்படுத்தப்பட்ட  ஒழுங்குகளுடன் அவர்கள் முன்னெடுக்கும் வழிபாடுகள் மற்றும் கூட்டுறவு சார் நடவடிக்கைகளை மதிப்பதும் அவை சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதும் அனைவரதும் கடமை. சமய விழுமியங்களை மதிக்கும் அறம் அவசியம் சமய நடவடிக்கைகள் தடுக்கப்படுவதும் குழப்பப்படுவதும் அர்த்தமற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள் இவை நல்லிணக்கமான ஒரு நாடு உருவாக பெரிய தடை.எனவே அரசு நீதிப்பொறிமுறையை பாவித்து உடனடியாக குழப்பத்தை ஏற்படுத்தியவருடைய பொறுப்பினத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.வழிபாட்டுக்கு வந்து ஏற்பட்ட குழப்பத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இத்தகைய சமய உரிமை மீறல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்- என்றுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement