• Nov 27 2024

நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம்...!கரு ஜயசூரிய வலியுறுத்து...!

Sharmi / Jun 11th 2024, 4:50 pm
image

நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்  தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்த பிரச்சனைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும்.

ஆகையால் இவ்விடயம் தொடர்பில்  கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும்.

மேலும் 09  ஆவது பாராளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் சமூக நீதிக்கான  தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அவர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க , மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தற்போது பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்த கருத்தில் உறுதியாக இருப்பது எமக்கு தெரியும்.

இது போன்ற முற்போக்கான அபிலாசைகளை பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாடை கூட்டி  இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.

மேலும் தமிழ் டயஸ்போராவில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயத்திற்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது.

மேலும் இந்த பேச்சு வார்த்தைகளை புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால்  துரோகிகள் என்று எதிர்கால சந்ததியினர் குற்றச்சாட்ட வழி வகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட பாராளுமன்றம் உன்னத நோக்கத்துடன் உடையத்தில் தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம்.கரு ஜயசூரிய வலியுறுத்து. நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்  தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்த பிரச்சனைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும். ஆகையால் இவ்விடயம் தொடர்பில்  கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். மேலும் 09  ஆவது பாராளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் சமூக நீதிக்கான  தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி அவர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க , மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது பாராளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்த கருத்தில் உறுதியாக இருப்பது எமக்கு தெரியும். இது போன்ற முற்போக்கான அபிலாசைகளை பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாடை கூட்டி  இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.மேலும் தமிழ் டயஸ்போராவில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயத்திற்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது.மேலும் இந்த பேச்சு வார்த்தைகளை புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால்  துரோகிகள் என்று எதிர்கால சந்ததியினர் குற்றச்சாட்ட வழி வகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட பாராளுமன்றம் உன்னத நோக்கத்துடன் உடையத்தில் தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement