• Mar 14 2025

யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டின் நடைபவனி நிகழ்வு..!

Sharmi / Mar 14th 2025, 4:38 pm
image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி என அழைக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரியானது 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு  இன்றையதினம்(14)  நடைபவனி நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த  1850ஆம் ஆண்டு பத்திரிசியார் மறை மாவட்ட ஆயரினால் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியானது நிறுவப்பட்டு 2025 ஆம் ஆண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் மேற்பார்வையில் 175 ஆண்டினை கொண்டாடி வருகின்றது.

அந்தவகையில் யாழ் கல்விப் புலத்தில் பல சாதனைகளை படைத்த யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியானது தனது 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

அந்தவகையில், முதல் நிகழ்வாக இன்றையதினம் காலை நடைபவனி நிகழ்வானது, கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமாகி, சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான ரி.எம்.எம் ஜோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூல் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

யாழ். பத்திரிசியார் கல்லூரி உப அதிபர் தலைமையில் நடைபெற்ற நடைபவனி நிகழ்வில், அணிவகுப்பு மரியாதை, தமிழர்களின் கலை, கலாசார அம்சங்களை தாங்கிய பல்வேறு கண்கவர் பேரணி, விளையாட்டு அணிவகுப்புகள், கல்லூரியின் விஞ்ஞான, கலை, சுகாதார மன்ற அமைப்புக்களின் அணிவகுப்புக்கள் என்பன இடம்பெற்றன. 

இந் நடைபவனியில் கல்லூரியின் மாணவர்கள் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்த மாணவ அமைப்பினர்கள், பங்கு முதல்வர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.



யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டின் நடைபவனி நிகழ்வு. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி என அழைக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரியானது 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு  இன்றையதினம்(14)  நடைபவனி நிகழ்வு இடம்பெற்றது.கடந்த  1850ஆம் ஆண்டு பத்திரிசியார் மறை மாவட்ட ஆயரினால் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியானது நிறுவப்பட்டு 2025 ஆம் ஆண்டு யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் மேற்பார்வையில் 175 ஆண்டினை கொண்டாடி வருகின்றது.அந்தவகையில் யாழ் கல்விப் புலத்தில் பல சாதனைகளை படைத்த யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியானது தனது 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.அந்தவகையில், முதல் நிகழ்வாக இன்றையதினம் காலை நடைபவனி நிகழ்வானது, கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமாகி, சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான ரி.எம்.எம் ஜோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூல் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.யாழ். பத்திரிசியார் கல்லூரி உப அதிபர் தலைமையில் நடைபெற்ற நடைபவனி நிகழ்வில், அணிவகுப்பு மரியாதை, தமிழர்களின் கலை, கலாசார அம்சங்களை தாங்கிய பல்வேறு கண்கவர் பேரணி, விளையாட்டு அணிவகுப்புகள், கல்லூரியின் விஞ்ஞான, கலை, சுகாதார மன்ற அமைப்புக்களின் அணிவகுப்புக்கள் என்பன இடம்பெற்றன. இந் நடைபவனியில் கல்லூரியின் மாணவர்கள் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்த மாணவ அமைப்பினர்கள், பங்கு முதல்வர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement