• Sep 21 2024

போராட்டத்தில் கலந்து கொண்டவரின் வீட்டின் மீது தாக்குதல் - யாழ் பல்கலை மாணவர்கள் கண்டனம்

Tamil nila / Jan 27th 2023, 7:08 pm
image

Advertisement

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்க வவுனியா மாவட்ட  செயலாளர் ஜெனிற்றாவின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இடம்பெற்ற கழிவொயில் வீச்சிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேரில் சென்று குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்த நிலையில் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.





இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்  கடந்த 15ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் தினத்தினை யாழில் முன்னெடுத்த வேளை முன்னின்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்க வவுனியா மாவட்ட  செயலாளர் ஜனநாயகரீதியில் போராட்டத்தினை முன்னடுத்திருந்தார். இதன் மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.ஆகவே தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்டோரின்  நீதிவேண்டி போராடுகின்றவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கபடவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.


போராட்டத்தில் கலந்து கொண்டவரின் வீட்டின் மீது தாக்குதல் - யாழ் பல்கலை மாணவர்கள் கண்டனம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்க வவுனியா மாவட்ட  செயலாளர் ஜெனிற்றாவின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இடம்பெற்ற கழிவொயில் வீச்சிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேரில் சென்று குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்த நிலையில் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்  கடந்த 15ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் தினத்தினை யாழில் முன்னெடுத்த வேளை முன்னின்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்க வவுனியா மாவட்ட  செயலாளர் ஜனநாயகரீதியில் போராட்டத்தினை முன்னடுத்திருந்தார். இதன் மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.ஆகவே தொடர்ச்சியாக காணாமல் ஆக்கப்பட்டோரின்  நீதிவேண்டி போராடுகின்றவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கபடவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement