• Sep 09 2024

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி....!

Tamil nila / Feb 28th 2024, 6:49 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024  புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில்  சந்திரசேகரன் அணியை எதிர்த்து ஞான நேசன் அணி இறுதி போட்டியில் மோதிக் கொண்டது.  



ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 02-01 என்ற கோல் கணக்கில் சந்திரசேகரன் அணி வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.



குறித்த இறுதிப் போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், செயலக  அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி இன்று காலை 28.02.2024  புதன்கிழமை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில்  சந்திரசேகரன் அணியை எதிர்த்து ஞான நேசன் அணி இறுதி போட்டியில் மோதிக் கொண்டது.  ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியின் இறுதியில் 02-01 என்ற கோல் கணக்கில் சந்திரசேகரன் அணி வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்.குறித்த இறுதிப் போட்டியில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், செயலக  அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement