ஈழத் தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக சுகந்தினி மதியமுதன் திகழ்வதாக புகழாரம் சூட்டப்பட்டது.
இந்நிகழ்வு கடந்த 19ஆம் திகதி தென்கொரியாவில் நடைபெற்றது.
சுகந்தினியின் செயல்பாடுகள் மே 18 இன் உணர்வோடு நெருக்கமாக இணைந்திருப்பதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை தென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை முழுமையாக ஆதரிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழ் பெண்ணுக்கு கிடைத்த மனித உரிமைகளுக்கான விசேட விருது. ஈழத் தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக சுகந்தினி மதியமுதன் திகழ்வதாக புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிகழ்வு கடந்த 19ஆம் திகதி தென்கொரியாவில் நடைபெற்றது.சுகந்தினியின் செயல்பாடுகள் மே 18 இன் உணர்வோடு நெருக்கமாக இணைந்திருப்பதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.மேலும் இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை தென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை முழுமையாக ஆதரிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.