புதிய நாடாளுமன்றத்திற்கு எதிர்கட்சியில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தேவை என்ற அடிப்படையில், கட்சியின் எஞ்சிய தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயரை பரிசீலிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் தேசிய ஜனநாயக முன்னணியிடம் இந்த கோரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக, அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்கட்சிக்கு வைத்திருப்பது முக்கியம் என்று ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனம், நாட்டின் வரலாற்றில் எரிசக்தி துறையில் கடினமான சீர்திருத்தங்களுக்கு தலைமை தாங்கிய காஞ்சன விஜேசேகரவுக்கு வழங்கப்படும் என தாம் நம்புவதாக அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
தேசியப்பட்டியலுக்குள் காஞ்சனவை உள்ளீர்க்குமாறு ஜீவன் கோரிக்கை புதிய நாடாளுமன்றத்திற்கு எதிர்கட்சியில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தேவை என்ற அடிப்படையில், கட்சியின் எஞ்சிய தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயரை பரிசீலிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் தேசிய ஜனநாயக முன்னணியிடம் இந்த கோரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு, நடந்துகொண்டிருக்கும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக, அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்கட்சிக்கு வைத்திருப்பது முக்கியம் என்று ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.எனவே, புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியிருக்கும் தேசியப்பட்டியல் ஆசனம், நாட்டின் வரலாற்றில் எரிசக்தி துறையில் கடினமான சீர்திருத்தங்களுக்கு தலைமை தாங்கிய காஞ்சன விஜேசேகரவுக்கு வழங்கப்படும் என தாம் நம்புவதாக அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .