• May 03 2025

இணையத்தில் வேலை வாய்ப்பு - மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம்

Chithra / Jan 10th 2025, 10:14 am
image


இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக முகநூல் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலம் வெளியாகும் விளம்பரத்தில், அங்கு பணிபுரியும் இடம் வீட்டு அலுவலகம் என குறிப்பிடப்பட்டு, ஆன்லைனில் இப்பணியை மேற்கொள்ள ஸ்மார்ட்போன் அல்லது கணினி தேவை என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் இந்த வேலைத் திட்டத்துடன் இணைக்க முடியும் என்றும், இந்த பகுதி நேர வேலையின் மூலம் தினசரி 17,500 முதல் 46,000 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிக்கப்பட்ட ஒரு பணிக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதில் சேருபவர்கள் தினமும் 3 நிமிடங்களில் தங்களுக்கு உரிய கமிஷனை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டாலும், இந்த வேலையின் நிலை என்ன என்பதை விளம்பரதாரர்கள் குறிப்பிடவில்லை.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்ய 2,000 ரூபாவை கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு இந்த மோசடி ஆட்கடத்தல்காரர்களால் துண்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி ஈடுபட்டுள்ளதாக அறிவித்ததன் காரணமாக இந்த இணைய மோசடியில் பெருமளவானோர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தில் வேலை வாய்ப்பு - மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்காக முகநூல் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலம் வெளியாகும் விளம்பரத்தில், அங்கு பணிபுரியும் இடம் வீட்டு அலுவலகம் என குறிப்பிடப்பட்டு, ஆன்லைனில் இப்பணியை மேற்கொள்ள ஸ்மார்ட்போன் அல்லது கணினி தேவை என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் மூலம் இந்த வேலைத் திட்டத்துடன் இணைக்க முடியும் என்றும், இந்த பகுதி நேர வேலையின் மூலம் தினசரி 17,500 முதல் 46,000 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிக்கப்பட்ட ஒரு பணிக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.இதில் சேருபவர்கள் தினமும் 3 நிமிடங்களில் தங்களுக்கு உரிய கமிஷனை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டாலும், இந்த வேலையின் நிலை என்ன என்பதை விளம்பரதாரர்கள் குறிப்பிடவில்லை.இதில் சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்ய 2,000 ரூபாவை கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு இந்த மோசடி ஆட்கடத்தல்காரர்களால் துண்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.இலங்கை மத்திய வங்கி ஈடுபட்டுள்ளதாக அறிவித்ததன் காரணமாக இந்த இணைய மோசடியில் பெருமளவானோர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now