• Apr 27 2024

இந்திய வம்சாவளி நடிகை தட்டி சென்ற உயரிய விருது - வழங்கி கௌரவித்த ஜோ பைடன்! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 10:17 am
image

Advertisement

அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கான  'தேசிய மனித நேய விருது' என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியினால்  ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. 

மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்கள் போன்றவற்றை இந்த விருது கெளரவம் செய்கின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 'தேசிய மனித நேய விருது' வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது. 


குறித்த நிகழ்வில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை மிண்டி கலிங்கிற்கும் இவ்  உயரிய விருதை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கி கௌரவித்துள்ளார்.

வேரா மிண்டி சொக்கலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட 43 வயதான மிண்டி கலிங் அவர்கள், நடிகை மட்டுமன்றி  நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னகத்தே கொண்டவராவார். 

அத்துடன், மிண்டி கலிங்கை தவிர  மேலும் 11 பேருக்கு ஜோ பைடன் இந்த உயரிய விருதை வழங்கியுள்ளதுடன், குறித்த இவ் விருது வழங்கும் விழாவில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளி நடிகை தட்டி சென்ற உயரிய விருது - வழங்கி கௌரவித்த ஜோ பைடன் SamugamMedia அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கான  'தேசிய மனித நேய விருது' என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியினால்  ஒவ்வொரு ஆண்டும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்கள் போன்றவற்றை இந்த விருது கெளரவம் செய்கின்றது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 'தேசிய மனித நேய விருது' வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை மிண்டி கலிங்கிற்கும் இவ்  உயரிய விருதை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கி கௌரவித்துள்ளார்.வேரா மிண்டி சொக்கலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட 43 வயதான மிண்டி கலிங் அவர்கள், நடிகை மட்டுமன்றி  நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னகத்தே கொண்டவராவார். அத்துடன், மிண்டி கலிங்கை தவிர  மேலும் 11 பேருக்கு ஜோ பைடன் இந்த உயரிய விருதை வழங்கியுள்ளதுடன், குறித்த இவ் விருது வழங்கும் விழாவில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement