• Jan 23 2025

இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி இன்னும் தெளிவாக்கவில்லை - கஜேந்திரகுமார் எம்.பி

Tharmini / Jan 23rd 2025, 2:03 pm
image

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற உங்களின் முந்தைய கொள்கையிலிருந்து நீங்கள் ஒரு போதும் பின்வாங்க முடியாது. தேவைக்கேற்றவாறு நீங்கள் கொள்கையை மாற்றியமைக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா விவாதத்தில் கலந்த கொண்ட கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் இந்த கிளீன் சிறிலங்கா திட்டத்தைப் பற்றி நாம் விவாதிக்கும் போது நான் இணையத்தில் சென்று அறிந்து கொள்ள முயற்சித்தேன். அது சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை போன்ற மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுகளைப் படிக்கும் போது, அந்தப் பிரிவுகள் அரசியல் பிரச்சினைகளை முதன்மையாகவும் சுற்றுச் சூழலையும், தூய்மையையுடனும் தொடர்புபட்டிருந்தன. அவை மிகவும் பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது என்று நான் நினைக்கிறேன்.

 ஒருமைப்பாட்டை உறுதி செய்வதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் மிகவும் விரிவான வேலைத்திட்டத்தை இணையத்தளத்தில் முன்வைத்துள்ளதாக கருதுகிறேன். இவை, கடந்த பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் அரசாங்கத்திற்குக் கிடைத்த ஆணையைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. கிளீன் திட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த ஊழல் கலாச்சார அரசியல் கலாச்சாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசாங்கத்தின் கவனத்திற்கு ஒரு முக்கிய விடயத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் எனது நல்ல நண்பருமான கௌரவ நீதி அமைச்சர் அவர்கள் இங்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்க வேண்டும். ஜே.வி.பி யுடன் இணைந்த தேசிய மக்கள் சக்தியின், தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அவர்களின் கடந்தகால நிலைப்பாடுகள் காரணமாக, எனக்கு அவர்களுடன் அதிக உடன்பாடு இல்லை.

இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி இன்னும் தெளிவாக்கவில்லை. மேலும் அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் பல விடயங்களில் மிகவும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பதையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். கடந்த 75 ஆண்டுகள் நெறிமுறையாக இருக்கவில்லை என்றும், அதனால்தான் மக்கள் முழுமையான மறுசீரமைப்பை விரும்பினார்கள் என்றும் நீங்கள் தெரிவிப்பதன் மூலம், நீங்கள் பயன்படுத்திய நெறிமுறை என்ற சொல்லின் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் அந்த நெறிமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அதன் முக்கியமான பகுதி என்னவென்றால், இன்று நீங்கள் சொல்வதற்கும், நாளை நீங்கள் சொல்வதற்கும், உங்கள் சொந்த செயல்களின் பொருள் மற்றும் அர்த்தங்களுக்கும் இடையில் நீங்கள் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதேயாகும். இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

எனவே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். நான் மட்டுமல்ல ஜே.வி.பியே உடன்படாத ஒரு சட்டமுமாகும். இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஜே.வி.பியே கண்டித்திருக்கிறது. ஏனென்றால் அவர்களும் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டார்கள்.

தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று கூறப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல்கள் முடிந்த பின், அப்போதைய அரசாங்கம் முதல் வாரத்திலேயே அந்த உறுதிப்பாட்டில் இருந்து மிக விரைவாக பின்வாங்கிவிட்டது. நினைவேந்தலின் போது கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே காவல்துறையினர் நீதிமன்றங்களுக்குச் சென்று தம்மால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பி அறிக்கைகளில் இருந்த பயங்கரவாத  குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றிருந்தனர்.


நீங்கள் இந்தச் சட்டத்தை கொடூரமானது என்று சொல்கிறீர்கள். காவல்துறையோ அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதை எப்போதும் தவறாகப் பயன்படுத்துவார்கள். இது இந்த பயங்கரமான சட்டத்தின் வரலாறாகும். உங்கள் அரசாங்கம் வேறுவிதமாக இருக்க விரும்பினால், நீங்கள் நெறிமுறையாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்.


பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற உங்களின் முந்தைய கொள்கையிலிருந்து நீங்கள் ஒரு போதும் பின்வாங்க முடியாது. தேவைக்கேற்றவாறு நீங்கள் கொள்கையை மாற்றியமைக்க முடியாது. கிளிநொச்சி கோணாவில் பாடசாலைக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று ஆசிரியர்களை விசாரணை செய்ய முயன்றுள்ளனர். இல்ல விளையாட்டு போட்டியின் போது அலங்காரம் செய்தமைக்கு கூட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.


வடகிழக்கில் நடைபெறும் நினைவேந்தல் தொடர்பாக கௌரவ பொது பாதுகாப்பு அமைச்சர் மோசமாக கருத்து தெரிவித்துள்ளார். நினைவேந்தல் என்பது பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு சமமானது போன்று தெற்கில் உள்ள சிலர் கூறியதால் அவர் அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறார்.


வடகிழக்கிற்கு  வேறு வடிவத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது. அது நீங்கள் கூறும் நெறிமுறைக்கு புறம்பானதாக அமையும். சிலர் கூச்சலிடுவதால், உங்க நிலைப்பாட்டை மாற்ற முடியாது. நீங்கள் புதிய கலாசாரத்தை உருவாக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படவேண்டும். நீங்கள் அதே முந்தைய அரசாங்கங்களின் பாதையில் தான் செல்வீர்களாயின் அதே போன்றே பாதிக்கப்படுவீர்கள்.


பிரதமர் அவர்கள் இப்போது கல்வி அமைச்சராகவும் இருக்கின்றார். அவர் எதிர்கட்சியில் அமர்ந்திருந்த போது, எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடர்பாக பிரச்சினை ஒன்றை எழுப்பியிருந்தார். இலங்கை அதிபர் சேவைக்கான தகுதியை பெற்றிருந்த ஒருவர் அப்பாடசாலைக்கு அதிபராக முறையாக நியமமிக்கப்பட்டிருந்தபோதும் டக்ளஸின் அரசியல் தலையீடு காரணமாக அவரது நியமனம் இடைநிறுத்தப்பட்டதாகவும் மற்றும் தற்போது அதிபராக உள்ளவர்  அப்பாடசாலையின் அதிபராக செயற்படமுடியாதவர் என்றும் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


அவர் இப்போது கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நாட்டில் இந்த அரசாங்கத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார். எனவே, இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும்.


இறுதியாக, நீதியமைச்சர், அரசியல் கைதிகள் இல்லை என தெரிவித்திருந்தார். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாண உரைகளில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனவே அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 


இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி இன்னும் தெளிவாக்கவில்லை - கஜேந்திரகுமார் எம்.பி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற உங்களின் முந்தைய கொள்கையிலிருந்து நீங்கள் ஒரு போதும் பின்வாங்க முடியாது. தேவைக்கேற்றவாறு நீங்கள் கொள்கையை மாற்றியமைக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா விவாதத்தில் கலந்த கொண்ட கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கத்தின் இந்த கிளீன் சிறிலங்கா திட்டத்தைப் பற்றி நாம் விவாதிக்கும் போது நான் இணையத்தில் சென்று அறிந்து கொள்ள முயற்சித்தேன். அது சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை போன்ற மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரிவுகளைப் படிக்கும் போது, அந்தப் பிரிவுகள் அரசியல் பிரச்சினைகளை முதன்மையாகவும் சுற்றுச் சூழலையும், தூய்மையையுடனும் தொடர்புபட்டிருந்தன. அவை மிகவும் பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். ஒருமைப்பாட்டை உறுதி செய்வதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் மிகவும் விரிவான வேலைத்திட்டத்தை இணையத்தளத்தில் முன்வைத்துள்ளதாக கருதுகிறேன். இவை, கடந்த பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் அரசாங்கத்திற்குக் கிடைத்த ஆணையைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. கிளீன் திட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த ஊழல் கலாச்சார அரசியல் கலாச்சாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த அரசாங்கத்தின் கவனத்திற்கு ஒரு முக்கிய விடயத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். பொதுப் பாதுகாப்பு அமைச்சரும் எனது நல்ல நண்பருமான கௌரவ நீதி அமைச்சர் அவர்கள் இங்கு வந்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்க வேண்டும். ஜே.வி.பி யுடன் இணைந்த தேசிய மக்கள் சக்தியின், தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பான அவர்களின் கடந்தகால நிலைப்பாடுகள் காரணமாக, எனக்கு அவர்களுடன் அதிக உடன்பாடு இல்லை.இனப்பிரச்சினை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜே.வி.பி இன்னும் தெளிவாக்கவில்லை. மேலும் அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்கள் பல விடயங்களில் மிகவும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பதையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். கடந்த 75 ஆண்டுகள் நெறிமுறையாக இருக்கவில்லை என்றும், அதனால்தான் மக்கள் முழுமையான மறுசீரமைப்பை விரும்பினார்கள் என்றும் நீங்கள் தெரிவிப்பதன் மூலம், நீங்கள் பயன்படுத்திய நெறிமுறை என்ற சொல்லின் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.நீங்கள் அந்த நெறிமுறை என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அதன் முக்கியமான பகுதி என்னவென்றால், இன்று நீங்கள் சொல்வதற்கும், நாளை நீங்கள் சொல்வதற்கும், உங்கள் சொந்த செயல்களின் பொருள் மற்றும் அர்த்தங்களுக்கும் இடையில் நீங்கள் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதேயாகும். இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.எனவே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாகும். நான் மட்டுமல்ல ஜே.வி.பியே உடன்படாத ஒரு சட்டமுமாகும். இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஜே.வி.பியே கண்டித்திருக்கிறது. ஏனென்றால் அவர்களும் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டார்கள். தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று கூறப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல்கள் முடிந்த பின், அப்போதைய அரசாங்கம் முதல் வாரத்திலேயே அந்த உறுதிப்பாட்டில் இருந்து மிக விரைவாக பின்வாங்கிவிட்டது. நினைவேந்தலின் போது கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சில கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னரே காவல்துறையினர் நீதிமன்றங்களுக்குச் சென்று தம்மால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பி அறிக்கைகளில் இருந்த பயங்கரவாத  குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றிருந்தனர்.நீங்கள் இந்தச் சட்டத்தை கொடூரமானது என்று சொல்கிறீர்கள். காவல்துறையோ அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அதை எப்போதும் தவறாகப் பயன்படுத்துவார்கள். இது இந்த பயங்கரமான சட்டத்தின் வரலாறாகும். உங்கள் அரசாங்கம் வேறுவிதமாக இருக்க விரும்பினால், நீங்கள் நெறிமுறையாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற உங்களின் முந்தைய கொள்கையிலிருந்து நீங்கள் ஒரு போதும் பின்வாங்க முடியாது. தேவைக்கேற்றவாறு நீங்கள் கொள்கையை மாற்றியமைக்க முடியாது. கிளிநொச்சி கோணாவில் பாடசாலைக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று ஆசிரியர்களை விசாரணை செய்ய முயன்றுள்ளனர். இல்ல விளையாட்டு போட்டியின் போது அலங்காரம் செய்தமைக்கு கூட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.வடகிழக்கில் நடைபெறும் நினைவேந்தல் தொடர்பாக கௌரவ பொது பாதுகாப்பு அமைச்சர் மோசமாக கருத்து தெரிவித்துள்ளார். நினைவேந்தல் என்பது பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு சமமானது போன்று தெற்கில் உள்ள சிலர் கூறியதால் அவர் அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறார்.வடகிழக்கிற்கு  வேறு வடிவத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது. அது நீங்கள் கூறும் நெறிமுறைக்கு புறம்பானதாக அமையும். சிலர் கூச்சலிடுவதால், உங்க நிலைப்பாட்டை மாற்ற முடியாது. நீங்கள் புதிய கலாசாரத்தை உருவாக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படவேண்டும். நீங்கள் அதே முந்தைய அரசாங்கங்களின் பாதையில் தான் செல்வீர்களாயின் அதே போன்றே பாதிக்கப்படுவீர்கள்.பிரதமர் அவர்கள் இப்போது கல்வி அமைச்சராகவும் இருக்கின்றார். அவர் எதிர்கட்சியில் அமர்ந்திருந்த போது, எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடர்பாக பிரச்சினை ஒன்றை எழுப்பியிருந்தார். இலங்கை அதிபர் சேவைக்கான தகுதியை பெற்றிருந்த ஒருவர் அப்பாடசாலைக்கு அதிபராக முறையாக நியமமிக்கப்பட்டிருந்தபோதும் டக்ளஸின் அரசியல் தலையீடு காரணமாக அவரது நியமனம் இடைநிறுத்தப்பட்டதாகவும் மற்றும் தற்போது அதிபராக உள்ளவர்  அப்பாடசாலையின் அதிபராக செயற்படமுடியாதவர் என்றும் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.அவர் இப்போது கல்வி அமைச்சராக இருக்கிறார். ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நாட்டில் இந்த அரசாங்கத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார். எனவே, இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும்.இறுதியாக, நீதியமைச்சர், அரசியல் கைதிகள் இல்லை என தெரிவித்திருந்தார். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாண உரைகளில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனவே அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement