• Jan 10 2026

வீதியைக் கடக்கும்போது மோதிய கனரக வாகனம்; கனடாவில் பறிபோன யாழ். இளம் குடும்பப் பெண்ணின் உயிர்

Chithra / Jan 9th 2026, 10:56 am
image


கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


புங்குடுதீவு - கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவரும்,  கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய ராஜகாந் அனுஷா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


Etobicoke Dixon (எட்டோபிகோக் டிக்சன்) பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக அந் நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளார். 


இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந் நாட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியைக் கடக்கும்போது மோதிய கனரக வாகனம்; கனடாவில் பறிபோன யாழ். இளம் குடும்பப் பெண்ணின் உயிர் கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புங்குடுதீவு - கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவரும்,  கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய ராஜகாந் அனுஷா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Etobicoke Dixon (எட்டோபிகோக் டிக்சன்) பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக அந் நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந் நாட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement