கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையற்றது என்று அமைச்சர் கே.டி. லால் காந்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எதிரணிகள் அரசியல் நோக்கத்துடன் இந்தப் பிரேரணையை முன்வைக்கப்பவுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருப்பதால் எதிரணிகளின் முயற்சி வெற்றி பெறாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சராக ஹரிணி அமரசூரிய மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டின் கல்வி முறைமைக்கு சாதகமாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிரணிகளின் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் நாடகம் என்றும் அமைச்சர் லால் காந்த கடுமையாக விமர்சித்தார்.
ஹரிணிக்கு எதிரான பிரேரணை மண்கவ்வும் - லால் காந்த உறுதி கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையற்றது என்று அமைச்சர் கே.டி. லால் காந்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.எதிரணிகள் அரசியல் நோக்கத்துடன் இந்தப் பிரேரணையை முன்வைக்கப்பவுள்ளன என்றும் அவர் கூறினார்.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி அரசுக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருப்பதால் எதிரணிகளின் முயற்சி வெற்றி பெறாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.கல்வி அமைச்சராக ஹரிணி அமரசூரிய மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டின் கல்வி முறைமைக்கு சாதகமாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.எனவே, எதிரணிகளின் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் நாடகம் என்றும் அமைச்சர் லால் காந்த கடுமையாக விமர்சித்தார்.