• Jan 10 2026

டிப்பர் – லொறி நேருக்கு நேர் மோதி கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு- மூவர் வைத்தியசாலையில்!

shanuja / Jan 9th 2026, 11:03 am
image

டிப்பரும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்தக் கோர விபத்து பொலனறுவை - திம்புலாகலை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


திம்புலாகலை பிரதான வீதியில் அதிவேகமாகப் பயணித்த டிப்பர் வாகனம் வீதியின் நெறிமுறையை மீறி லொறி வந்த பாதையில் நுழைந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.


டிப்பர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 25 வயது இளைஞரும், லொறியின் சாரதியான 37 வயது குடும்பஸ்தரும், அவரின் உதவியாளரான 24 வயது இளைஞருமான என மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

டிப்பர் – லொறி நேருக்கு நேர் மோதி கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு- மூவர் வைத்தியசாலையில் டிப்பரும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்து பொலனறுவை - திம்புலாகலை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.திம்புலாகலை பிரதான வீதியில் அதிவேகமாகப் பயணித்த டிப்பர் வாகனம் வீதியின் நெறிமுறையை மீறி லொறி வந்த பாதையில் நுழைந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.டிப்பர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 25 வயது இளைஞரும், லொறியின் சாரதியான 37 வயது குடும்பஸ்தரும், அவரின் உதவியாளரான 24 வயது இளைஞருமான என மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement