• Feb 22 2025

ரஜரட்ட பல்கலை வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல்..!

Sharmi / Feb 21st 2025, 11:39 am
image

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகலை சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இந்நிலையில், வேந்தராக நியமனம் பெற்று ஒருவாரத்தில் பதவியை இவர் இராஜினாமா செய்துள்ளார்.

இவர் ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின்  விகாராதிபதியாவார். 

அதேவேளை, அகில இலங்கை சாசன பாதுகாப்பு  சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றும் இவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ரஜரட்ட பல்கலை வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகல். ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட கல்லேல்லே சுமனசிறி தேரர் பதவி விலகலை சமர்ப்பித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டார்.இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.இந்நிலையில், வேந்தராக நியமனம் பெற்று ஒருவாரத்தில் பதவியை இவர் இராஜினாமா செய்துள்ளார்.இவர் ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின்  விகாராதிபதியாவார். அதேவேளை, அகில இலங்கை சாசன பாதுகாப்பு  சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றும் இவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement