• Nov 28 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

Sharmi / Sep 16th 2024, 10:34 am
image

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அனைத்து சிவில் சமூக ஒன்றிய நிலைப்பாடு மற்றும் வடக்கு பிரதேச செயலக போராட்டம் அரசியல்  நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பினை பாண்டிருப்பு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில்  மேற்கொண்டு  இவ்வாறு  குறிப்பிட்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்டு காணப்படுகின்ற 29 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும் வாழுகின்ற பொதுமக்கள் பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒழுங்கமைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற உரிமைக்கான மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் எமது இலக்கு நோக்கி எமது மக்களுடைய அபிலாசைகளோடு அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த திட்டமிடல்களோடு தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம்.

அது மாத்திரமில்லாமல் போராடுகின்ற மக்கள் சார்பாக அன்று நடைபெறுகின்ற போராட்டம் தொடர்பிலான ஆதாரங்களோடும் எமது மக்களுடைய கோரிக்கைகளோடும் அனைத்து சிவில் சமூகக் கட்டமைப்பினுடைய இறப்பர் முத்திரையோடு தொடர்ச்சியாகவும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர்.உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர்.மாவட்ட செயலாளர் என பல தரப்பினருக்கும் எமது கோரிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்பியிருந்தாலும் கூட ஒரு சில பதில்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் அமைச்சின் செயலாளர் போன்றவர்களிடமிருந்தும் மாவட்ட செயலாளரிடமிருந்தும் கிடைத்திருந்தாலும் அவைகளிலே எது விதமான திருப்தியும் எங்களுக்கு இல்லை அல்லது எங்களுடைய கோரிக்கைகளுக்குரிய பதிலாக அவைகள் அமையவில்லை என்பதை வெளிப்படுத்துவதோடு அதையும் கடந்து தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் உரிமைக்காக வீதியில் இறங்கிக் குரல் கொடுத்து அமைதி வழியில் போராடுகின்றனர். ஆனாலும் இந்த அரசு எமது மக்களுடைய போராட்டத்தை மதிக்கவோ அல்லது எமது மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கான தீர்வை வழங்குவதற்கோ முன் வந்திருக்கவில்லை என்பதையும் மாறாகத் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளதோடு இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் எமக்கான தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும்  ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் தொடர்ந்தும் நேரடியாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு எமது விடயத்தைக் கொண்டு செல்லக்கூடியவர்கள் ஊடாகவும் பல்வேறு முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம்.

விசேடமாக எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாண ஆளுநர் ,ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட 24 மணி நேர செயற்குழு தலைவர் உள்ளிட்டவர்கள் மற்றும் பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் ஊடாகவும் பல முயற்சிகள் எடுத்திருந்தும் எமது வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலை காணப்படுவதோடு நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம்.

மேலும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற  அமைச்சர்கள் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் போன்றவர்களுடன் கூட நாங்கள் பேசியிருந்தோம் எமக்காக ஜனாதிபதியோடு பேசி எமது உரிமைக்கான குரலாக நீங்களும் இருந்து குறைந்தது ஒரு கணக்காளரை பெற்றுத் தாருங்கள் அல்லது நடைமுறையில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற வங்கிக் கணக்கையாவது மீள திறந்து தாருங்கள் என்றும் கேட்டிருந்தோம் யாரும் இதுவரை அதை செய்து கொடுக்கவில்லை.

எமக்காக எதையும் செய்யவும் இல்லை என்பதையும் அவர்களும் தொடர்ந்தும் இன்றுவரை எமது மக்களை ஏமாற்றியுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்துவதோடு.மீண்டும் இறுதியாக நாங்கள் கடந்த 11.09.2024 அன்றும் கூட திருக்கோவில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியினுடைய தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது எங்களுக்காக ஒரு தீர்வை தர இருக்கிறார் என்று அறிந்தோம். குறைந்தபட்சமாக ஒரு கணக்காளர் அல்லது அதனிலும் குறைவாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் செயல்படுத்தக் கூடியதாக இருக்கின்ற நிறுத்தப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் ஆரம்பிப்பது பற்றியும் நாங்கள் கேட்டிருந்தோம்.

 ஆனால் அதுவும் எங்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும் கூறுவதோடு நாங்கள் நூறு வீதம் நம்பி இருந்த ஜனாதிபதியினுடைய பதில் இவ்வாறுதான் இருந்தது என்பதையும் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, இதுவரையில் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து எங்களை பலர் சந்தித்திருக்கிறார்கள்.

அதே போன்று நாங்களும் அவரை பல தடவைகள் பலதரப்புகள் ஊடாக சந்தித்திருக்கிறோம். ஆனாலும் இதில் எந்த நன்மையும் இதுவரை ஏற்படவில்லை என்பதையும் இன்றுவரை அவர் எமது மக்களை ஏமாற்றிவிட்டார் என்பதையும் ஆனால் எமது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களது முகவர்கள் மற்றும் உள்ளுார் அரசியல்வாதிகளாடாக பொய் செய்திகள் வாக்குறுதிகளோடு பலர் வருகிறார்கள்.

அவர்கள் யாரையும் நம்ப வேண்டாம் எமது செயல்க விடயத்தில் அவர்கள் கூறும் செய்திகளும் வாக்குறுதிகளும் பொய்யானவை என்பதையும் வெளிப்படுத்துகிறோம்.

அதே போன்று மற்றுமொரு வேட்பாளராக இருக்கக்கூடிய சஜித் பிரேமதாச  தரப்பில் இதுவரை யாரும் போராட்டம் செய்து வருகின்ற மக்களை அல்லது மக்கள் சார்ந்தவர்களை சந்திக்கவில்லை என்பதையும் நாங்களும் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதையும் வெளிப்படுத்துவதோடு, அவர்கள் தற்போது ஆட்சியாளர்கள் கிடையாது என்பதனால் குறைந்தபட்சம் வாக்குறுதியையாவது தருவதற்கு முன்வராதது ஏன் என சிந்திக்க வைப்பதோடு சிலவேளை அவருடன் எமது செயலக விடயத்திற்கு எதிராக செயற்படுகின்ற தரப்பினர் இருப்பதனால் எம்மை சந்திக்கவில்லையோ என நினைப்பதோடு அதுவும் காரணமாக இருக்கலாம் என்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதோடு இவர்கள் தரப்பிலும் இதன்பின்னர் யாராவது அவர்களது முகவர்கள் அல்லது உள்ளுார் அரசியல்வாதிகள் பொய் செய்திகள் பொய் வாக்குறுதிகளுடன் வரலாம் என்பதால் அவர்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள் என்பதையும் கூறுகின்றோம்.

மேலும் மாற்றுமொரு தரப்பாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய தரப்பிலிருந்து இரண்டு தடவை எம்முடன் தொலைபேசி மூலமாகப் பேசியிருந்தார்கள் இரண்டு தடவை எங்களை நேரிலும் சந்தித்திருந்தார்கள் அவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக இல்லை என்பதனால் எமக்கு வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள்.

அதாவது தாங்கள் ஆட்சிக்கு வருகின்ற பட்சத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மாத்திரம் அல்ல இலங்கையில் காணப்படுகின்ற ஒட்டுமொத்தமான நிர்வாக ரீதியான அத்தனை பிரச்சினைகளும் அரசியல் தலையீடுகள் இன்றி தீர்த்து வைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதியை எங்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்பதையும் கூறிக்கொள்வதோடு இவர்கள் தரப்பிலும் சில முகவர்கள் ஒருநாளும் எமது மக்கள் போராட்டத் தளத்திற்கும் வராதவர்கள் மக்கள் போராட்டம் பிழை என கூறியவர்கள் தம்மை போராட்டக்குழு என அறிமுகப்படுத்திச் சென்று சுயலாப அரசியல் செய்திருக்கிறார்கள்.

எனவே அவர்கள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருங்கள் எனவும் கூறிக் கொள்கிறோம்.

அத்தோடு இம்முறை தமிழர் தரப்பாக ஒரு வேட்பாளரும் களத்தில் தமிழரின் தனித்துவ அடயாளத்திற்காகவும் ஒற்றுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும் நிறுத்தப்பட்டுள்ளதனால் அதுபற்றியும் பொதுமக்களாகிய நீங்களே சிந்திக்க வேண்டும் சிந்தித்து முடிவெடுத்து உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த செய்தியாளர் மாநாடு ஊடாக நாங்கள் வெளிப்படுத்துவதோடு,இவ்வாறான நிலையிலே நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது அதேபோன்று எங்களுடைய மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் இருந்தாலும் எங்களுடைய மக்கள் புத்திசாதுர்யமாக சிந்திக்க கூடியவர்கள் இவ்வளவு காலமும் ஒவ்வொரு தரப்புகளால் மாறி மாறி ஏமாற்றப்பட்டவர்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அதனால் நன்றாக சிந்தித்து தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு உரித்தானது உரிமையுடையது அது பலம் மிக்கது என்பதினால் நன்றாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், யாருக்கும் வாக்களிக்குமாறு கூற முடியாத ஒரு சூழ்நிலையில் எங்களுடைய கருத்தை வெளிப்படுத்துகிறோம்.

மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போகின்ற வெற்றி பெற்று எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக வரப் போகின்றவரிடம் நாங்கள் கேட்பது தயவு செய்து நீங்கள் ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிர்வாக ரீதியான அத்தனை விடயங்களையும் தீர்த்துத் தனியான ஒரு பிரதேச செயலகமாக இது தனித்துவமாக இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும் பணிவாக கேட்டுக் கொள்வதோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் பல தரப்புகளையும் சேர்ந்த பல முகவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் மக்களை நாடி வரலாம் பொய் செய்திகளையும் பொய் வாக்குறுதிகளையும் கூறி ஏமாற்றலாம்.

ஆனால் அவை எதையும் நம்ப வேண்டாம் ஆனால் உங்கள் வாக்குகளைக் கட்டாயம் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சிந்தித்துச் செலுத்துங்கள் எனவும் கல்முனையில் எங்களின் வாக்கு பலத்தினை வெளிக்காட்டுவதற்கு அனைவரும் 100மூ உங்கள் வாக்குகளை நீங்கள் விரும்புகின்ற யாருக்காவது வழங்கி எமது வாக்குப் பலத்தை வெளிக் காட்டுவதன் மூலமாகவே எம்முடைய அடுத்தகட்ட நகர்வை நாங்கள் முன்னெடுக்க முடியும் என்பதையும் உங்கள் வாக்களிப்பு வீத அதிகரிப்பு எமது போராட்டத்திற்கு இன்னும் அதிகமாக வலுச்சேர்க்கும் என்பதையும் கேட்டு எங்களுடைய போராட்டம் நாளைய 175 வது நாளுடன் தேர்தல் சட்ட விடயங்கள், அசௌகரியங்கள் எமது மக்களின் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகத் தேர்தல் வரையும் நிறுத்தப்பட்டு எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஜனாதிபதி வருகை தருகிற போது அவரிடமும் எங்களுடைய கோரிக்கை மக்கள் சார்பாக கொண்டு சேர்க்கப்பட்டு அவர்களுடைய தீர்வு எங்களுக்கு கிடைத்தால் அவர்களுக்கு விசுவாசமாக எங்களுடைய மக்கள் எப்போதும் இருப்போம் என்ற ஒரு விடயத்தையும் கூறி அவ்வாறு எங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர்ச்சியாக எங்களுடைய போராட்டம் தொடரும் என்பதையும் கூறிக் கொள்கின்றோம் என செய்தி அறிக்கையின் ஊடாக தெரிவித்தனர்.

 


கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அனைத்து சிவில் சமூக ஒன்றிய நிலைப்பாடு மற்றும் வடக்கு பிரதேச செயலக போராட்டம் அரசியல்  நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பினை பாண்டிருப்பு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில்  மேற்கொண்டு  இவ்வாறு  குறிப்பிட்டனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்டு காணப்படுகின்ற 29 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும் வாழுகின்ற பொதுமக்கள் பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒழுங்கமைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற உரிமைக்கான மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் எமது இலக்கு நோக்கி எமது மக்களுடைய அபிலாசைகளோடு அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த திட்டமிடல்களோடு தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம்.அது மாத்திரமில்லாமல் போராடுகின்ற மக்கள் சார்பாக அன்று நடைபெறுகின்ற போராட்டம் தொடர்பிலான ஆதாரங்களோடும் எமது மக்களுடைய கோரிக்கைகளோடும் அனைத்து சிவில் சமூகக் கட்டமைப்பினுடைய இறப்பர் முத்திரையோடு தொடர்ச்சியாகவும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர்.உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர்.மாவட்ட செயலாளர் என பல தரப்பினருக்கும் எமது கோரிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்பியிருந்தாலும் கூட ஒரு சில பதில்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் அமைச்சின் செயலாளர் போன்றவர்களிடமிருந்தும் மாவட்ட செயலாளரிடமிருந்தும் கிடைத்திருந்தாலும் அவைகளிலே எது விதமான திருப்தியும் எங்களுக்கு இல்லை அல்லது எங்களுடைய கோரிக்கைகளுக்குரிய பதிலாக அவைகள் அமையவில்லை என்பதை வெளிப்படுத்துவதோடு அதையும் கடந்து தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் உரிமைக்காக வீதியில் இறங்கிக் குரல் கொடுத்து அமைதி வழியில் போராடுகின்றனர். ஆனாலும் இந்த அரசு எமது மக்களுடைய போராட்டத்தை மதிக்கவோ அல்லது எமது மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கான தீர்வை வழங்குவதற்கோ முன் வந்திருக்கவில்லை என்பதையும் மாறாகத் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளதோடு இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம்.இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் எமக்கான தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும்  ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் தொடர்ந்தும் நேரடியாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு எமது விடயத்தைக் கொண்டு செல்லக்கூடியவர்கள் ஊடாகவும் பல்வேறு முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். விசேடமாக எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாண ஆளுநர் ,ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட 24 மணி நேர செயற்குழு தலைவர் உள்ளிட்டவர்கள் மற்றும் பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் ஊடாகவும் பல முயற்சிகள் எடுத்திருந்தும் எமது வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலை காணப்படுவதோடு நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம்.மேலும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற  அமைச்சர்கள் வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் போன்றவர்களுடன் கூட நாங்கள் பேசியிருந்தோம் எமக்காக ஜனாதிபதியோடு பேசி எமது உரிமைக்கான குரலாக நீங்களும் இருந்து குறைந்தது ஒரு கணக்காளரை பெற்றுத் தாருங்கள் அல்லது நடைமுறையில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற வங்கிக் கணக்கையாவது மீள திறந்து தாருங்கள் என்றும் கேட்டிருந்தோம் யாரும் இதுவரை அதை செய்து கொடுக்கவில்லை. எமக்காக எதையும் செய்யவும் இல்லை என்பதையும் அவர்களும் தொடர்ந்தும் இன்றுவரை எமது மக்களை ஏமாற்றியுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்துவதோடு.மீண்டும் இறுதியாக நாங்கள் கடந்த 11.09.2024 அன்றும் கூட திருக்கோவில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியினுடைய தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது எங்களுக்காக ஒரு தீர்வை தர இருக்கிறார் என்று அறிந்தோம். குறைந்தபட்சமாக ஒரு கணக்காளர் அல்லது அதனிலும் குறைவாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் செயல்படுத்தக் கூடியதாக இருக்கின்ற நிறுத்தப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் ஆரம்பிப்பது பற்றியும் நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும் கூறுவதோடு நாங்கள் நூறு வீதம் நம்பி இருந்த ஜனாதிபதியினுடைய பதில் இவ்வாறுதான் இருந்தது என்பதையும் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, இதுவரையில் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து எங்களை பலர் சந்தித்திருக்கிறார்கள். அதே போன்று நாங்களும் அவரை பல தடவைகள் பலதரப்புகள் ஊடாக சந்தித்திருக்கிறோம். ஆனாலும் இதில் எந்த நன்மையும் இதுவரை ஏற்படவில்லை என்பதையும் இன்றுவரை அவர் எமது மக்களை ஏமாற்றிவிட்டார் என்பதையும் ஆனால் எமது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களது முகவர்கள் மற்றும் உள்ளுார் அரசியல்வாதிகளாடாக பொய் செய்திகள் வாக்குறுதிகளோடு பலர் வருகிறார்கள். அவர்கள் யாரையும் நம்ப வேண்டாம் எமது செயல்க விடயத்தில் அவர்கள் கூறும் செய்திகளும் வாக்குறுதிகளும் பொய்யானவை என்பதையும் வெளிப்படுத்துகிறோம்.அதே போன்று மற்றுமொரு வேட்பாளராக இருக்கக்கூடிய சஜித் பிரேமதாச  தரப்பில் இதுவரை யாரும் போராட்டம் செய்து வருகின்ற மக்களை அல்லது மக்கள் சார்ந்தவர்களை சந்திக்கவில்லை என்பதையும் நாங்களும் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதையும் வெளிப்படுத்துவதோடு, அவர்கள் தற்போது ஆட்சியாளர்கள் கிடையாது என்பதனால் குறைந்தபட்சம் வாக்குறுதியையாவது தருவதற்கு முன்வராதது ஏன் என சிந்திக்க வைப்பதோடு சிலவேளை அவருடன் எமது செயலக விடயத்திற்கு எதிராக செயற்படுகின்ற தரப்பினர் இருப்பதனால் எம்மை சந்திக்கவில்லையோ என நினைப்பதோடு அதுவும் காரணமாக இருக்கலாம் என்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதோடு இவர்கள் தரப்பிலும் இதன்பின்னர் யாராவது அவர்களது முகவர்கள் அல்லது உள்ளுார் அரசியல்வாதிகள் பொய் செய்திகள் பொய் வாக்குறுதிகளுடன் வரலாம் என்பதால் அவர்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள் என்பதையும் கூறுகின்றோம்.மேலும் மாற்றுமொரு தரப்பாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய தரப்பிலிருந்து இரண்டு தடவை எம்முடன் தொலைபேசி மூலமாகப் பேசியிருந்தார்கள் இரண்டு தடவை எங்களை நேரிலும் சந்தித்திருந்தார்கள் அவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக இல்லை என்பதனால் எமக்கு வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள். அதாவது தாங்கள் ஆட்சிக்கு வருகின்ற பட்சத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மாத்திரம் அல்ல இலங்கையில் காணப்படுகின்ற ஒட்டுமொத்தமான நிர்வாக ரீதியான அத்தனை பிரச்சினைகளும் அரசியல் தலையீடுகள் இன்றி தீர்த்து வைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதியை எங்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்பதையும் கூறிக்கொள்வதோடு இவர்கள் தரப்பிலும் சில முகவர்கள் ஒருநாளும் எமது மக்கள் போராட்டத் தளத்திற்கும் வராதவர்கள் மக்கள் போராட்டம் பிழை என கூறியவர்கள் தம்மை போராட்டக்குழு என அறிமுகப்படுத்திச் சென்று சுயலாப அரசியல் செய்திருக்கிறார்கள். எனவே அவர்கள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருங்கள் எனவும் கூறிக் கொள்கிறோம்.அத்தோடு இம்முறை தமிழர் தரப்பாக ஒரு வேட்பாளரும் களத்தில் தமிழரின் தனித்துவ அடயாளத்திற்காகவும் ஒற்றுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும் நிறுத்தப்பட்டுள்ளதனால் அதுபற்றியும் பொதுமக்களாகிய நீங்களே சிந்திக்க வேண்டும் சிந்தித்து முடிவெடுத்து உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த செய்தியாளர் மாநாடு ஊடாக நாங்கள் வெளிப்படுத்துவதோடு,இவ்வாறான நிலையிலே நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது அதேபோன்று எங்களுடைய மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் இருந்தாலும் எங்களுடைய மக்கள் புத்திசாதுர்யமாக சிந்திக்க கூடியவர்கள் இவ்வளவு காலமும் ஒவ்வொரு தரப்புகளால் மாறி மாறி ஏமாற்றப்பட்டவர்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அதனால் நன்றாக சிந்தித்து தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு உரித்தானது உரிமையுடையது அது பலம் மிக்கது என்பதினால் நன்றாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், யாருக்கும் வாக்களிக்குமாறு கூற முடியாத ஒரு சூழ்நிலையில் எங்களுடைய கருத்தை வெளிப்படுத்துகிறோம்.மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போகின்ற வெற்றி பெற்று எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக வரப் போகின்றவரிடம் நாங்கள் கேட்பது தயவு செய்து நீங்கள் ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிர்வாக ரீதியான அத்தனை விடயங்களையும் தீர்த்துத் தனியான ஒரு பிரதேச செயலகமாக இது தனித்துவமாக இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும் பணிவாக கேட்டுக் கொள்வதோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் பல தரப்புகளையும் சேர்ந்த பல முகவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் மக்களை நாடி வரலாம் பொய் செய்திகளையும் பொய் வாக்குறுதிகளையும் கூறி ஏமாற்றலாம். ஆனால் அவை எதையும் நம்ப வேண்டாம் ஆனால் உங்கள் வாக்குகளைக் கட்டாயம் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சிந்தித்துச் செலுத்துங்கள் எனவும் கல்முனையில் எங்களின் வாக்கு பலத்தினை வெளிக்காட்டுவதற்கு அனைவரும் 100மூ உங்கள் வாக்குகளை நீங்கள் விரும்புகின்ற யாருக்காவது வழங்கி எமது வாக்குப் பலத்தை வெளிக் காட்டுவதன் மூலமாகவே எம்முடைய அடுத்தகட்ட நகர்வை நாங்கள் முன்னெடுக்க முடியும் என்பதையும் உங்கள் வாக்களிப்பு வீத அதிகரிப்பு எமது போராட்டத்திற்கு இன்னும் அதிகமாக வலுச்சேர்க்கும் என்பதையும் கேட்டு எங்களுடைய போராட்டம் நாளைய 175 வது நாளுடன் தேர்தல் சட்ட விடயங்கள், அசௌகரியங்கள் எமது மக்களின் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகத் தேர்தல் வரையும் நிறுத்தப்பட்டு எதிர்வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஜனாதிபதி வருகை தருகிற போது அவரிடமும் எங்களுடைய கோரிக்கை மக்கள் சார்பாக கொண்டு சேர்க்கப்பட்டு அவர்களுடைய தீர்வு எங்களுக்கு கிடைத்தால் அவர்களுக்கு விசுவாசமாக எங்களுடைய மக்கள் எப்போதும் இருப்போம் என்ற ஒரு விடயத்தையும் கூறி அவ்வாறு எங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர்ச்சியாக எங்களுடைய போராட்டம் தொடரும் என்பதையும் கூறிக் கொள்கின்றோம் என செய்தி அறிக்கையின் ஊடாக தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement