கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் அடிப்படையில் ZPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25,26,27 ஆம் திகதிகளில் பகல், இரவு போட்டிகளாக நடைபெறும் என்றும் இச்சுற்றுப்போட்டியில் 32 அணிகள் பங்குபற்றுகின்றன எனவும், பாடசாலைக்கான பஸ் கொள்வனவுக்கு நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு முடியுமானவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ நிதியுதவி வழங்க முடியும் இவ் ஊடக மாநாட்டில் சில முடிவுகள் எட்டப்பட்டதாக அதிபர் ஜாபீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும் Zahirian Walk நிகழ்வுக்கு பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் சகலரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் Zahirian Walk நிகழ்வுக்கு வெளியிடப்படவுள்ள T- Shirts இனை பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கொள்வனவு செய்து பாடசாலையின் அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் பாடசாலை பஸ் கொள்வனவுக்காக Zahirian"s 90's Bach பிரிவினர் ரூபா 5 லட்சம் நிதியினை இதன்போது கையளித்தனர். இந்நிதியினை வைத்தியர் சனூஸ் காரியப்பர், இலங்கை வங்கி முகாமையாளர் முஸ்தகீம் மௌலானா ஆகியோர் கையளித்திருந்தனர். மேலும் அண்மையில் மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ஹர் இப்றாஹிமை நினைவுகூர்ந்து பிரார்த்தனை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) மாலை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் அடிப்படையில் ZPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25,26,27 ஆம் திகதிகளில் பகல், இரவு போட்டிகளாக நடைபெறும் என்றும் இச்சுற்றுப்போட்டியில் 32 அணிகள் பங்குபற்றுகின்றன எனவும், பாடசாலைக்கான பஸ் கொள்வனவுக்கு நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு முடியுமானவர்கள் தனியாகவோ, குழுக்களாகவோ நிதியுதவி வழங்க முடியும் இவ் ஊடக மாநாட்டில் சில முடிவுகள் எட்டப்பட்டதாக அதிபர் ஜாபீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.மேலும் Zahirian Walk நிகழ்வுக்கு பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் சகலரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் Zahirian Walk நிகழ்வுக்கு வெளியிடப்படவுள்ள T- Shirts இனை பாடசாலையின் பழைய மாணவர்கள் சகலரும் கொள்வனவு செய்து பாடசாலையின் அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிகழ்வில் பாடசாலை பஸ் கொள்வனவுக்காக Zahirian"s 90's Bach பிரிவினர் ரூபா 5 லட்சம் நிதியினை இதன்போது கையளித்தனர். இந்நிதியினை வைத்தியர் சனூஸ் காரியப்பர், இலங்கை வங்கி முகாமையாளர் முஸ்தகீம் மௌலானா ஆகியோர் கையளித்திருந்தனர். மேலும் அண்மையில் மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ஹர் இப்றாஹிமை நினைவுகூர்ந்து பிரார்த்தனை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.