• Dec 09 2024

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

Tharmini / Oct 21st 2024, 10:58 am
image

கிளிநொச்சி ஏ9 வீதி மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று அதிகாலை 7.30 மணியளவில்  (21) இடம்பெற்ற வீதிவிபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து முருகாண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியைக் கடக்க முன்ற துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு நபர்களும் விபத்துக்குள்ளாகினார்கள். இவ்விபத்துச் சம்பவம் ஏ9 வீதியில் பாடசாலையை குறிக்கும் பதாகைகள் போடப்பட்டிருக்கும் மற்றும் அருகில் பாதைசாரி கடவைகள் காணப்படும் பகுதியில் , அதிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் துச்சக்கர வண்டியில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காயம் அடைந்த இருவரையும் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். 



கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் கிளிநொச்சி ஏ9 வீதி மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று அதிகாலை 7.30 மணியளவில்  (21) இடம்பெற்ற வீதிவிபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து முருகாண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியைக் கடக்க முன்ற துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு நபர்களும் விபத்துக்குள்ளாகினார்கள். இவ்விபத்துச் சம்பவம் ஏ9 வீதியில் பாடசாலையை குறிக்கும் பதாகைகள் போடப்பட்டிருக்கும் மற்றும் அருகில் பாதைசாரி கடவைகள் காணப்படும் பகுதியில் , அதிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் துச்சக்கர வண்டியில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் காயம் அடைந்த இருவரையும் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement