• Sep 20 2024

கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிப்பு - உதாசீனம் செய்யப்பட்டது அமைச்சர் மற்றும் அரச அதிபரின் உத்தரவுகள்

Chithra / Aug 6th 2024, 2:41 pm
image

Advertisement


கனகாம்பிகைகுளம் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 29ஆம் திகதி கமக்கார அமைப்பு  மற்றும் பொது  மக்கள் எதிர்ப்பு போராட்டம்ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு  கிளி நொச்சி மாவட்ட அரச அதிபர்,  முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் சென்றிருந்தனர். 

அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் குளத்தினை அடாத்த பிடிக்கப்பட்டவரின் ஆவணங்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான எவ்வித ஆவணங்களும் இன்மையால்  உடனடியாக இரண்டு நாட்களுக்குள் நிரப்பட்ட மண்ணை அகற்றி, குளத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் அவர்கள் பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை

வழங்கினார்.

அனால் குளத்தை மண் நிரப்பி ஆக்கிரமித்த  நபர் இன்றுவரை அவற்றை முழுமையாக அகற்றவில்லை. பொலீஸாரும் அது  தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மாவட்ட அரச அதிபரின் உத்தரவை பொலீஸாரும் மற்றும் குளத்தை ஆக்கிரமித்த நபரும் உதாசீனம் செய்துவிட்டனர் என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொலீஸாரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தார்.

ஆனால் குளம் ஆக்கிரமிக்கப்பட்ட விடயத்தில்  நடவடிக்கை எதுவும் இன்று வரை இடம்பெறவில்லை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் மற்றும் அரச உயரதிகாரிகளின் உத்தரவுகள் உதாசீனம் செய்யப்படும் நிலைமையானது பொது மக்கள் மத்தியில் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 


கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிப்பு - உதாசீனம் செய்யப்பட்டது அமைச்சர் மற்றும் அரச அதிபரின் உத்தரவுகள் கனகாம்பிகைகுளம் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 29ஆம் திகதி கமக்கார அமைப்பு  மற்றும் பொது  மக்கள் எதிர்ப்பு போராட்டம்ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.சம்பவ இடத்திற்கு  கிளி நொச்சி மாவட்ட அரச அதிபர்,  முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் குளத்தினை அடாத்த பிடிக்கப்பட்டவரின் ஆவணங்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான எவ்வித ஆவணங்களும் இன்மையால்  உடனடியாக இரண்டு நாட்களுக்குள் நிரப்பட்ட மண்ணை அகற்றி, குளத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் அவர்கள் பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரைவழங்கினார்.அனால் குளத்தை மண் நிரப்பி ஆக்கிரமித்த  நபர் இன்றுவரை அவற்றை முழுமையாக அகற்றவில்லை. பொலீஸாரும் அது  தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட அரச அதிபரின் உத்தரவை பொலீஸாரும் மற்றும் குளத்தை ஆக்கிரமித்த நபரும் உதாசீனம் செய்துவிட்டனர் என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொலீஸாரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தார்.ஆனால் குளம் ஆக்கிரமிக்கப்பட்ட விடயத்தில்  நடவடிக்கை எதுவும் இன்று வரை இடம்பெறவில்லை அமைப்புகள் தெரிவித்துள்ளன.அமைச்சர் மற்றும் அரச உயரதிகாரிகளின் உத்தரவுகள் உதாசீனம் செய்யப்படும் நிலைமையானது பொது மக்கள் மத்தியில் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement