ஒரு வார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை பொலிஸ் மா அதிபரினால் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு இணங்க காங்கேசன்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த பகுதி அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கசிப்பு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
காங்கேசன்துறை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.Samugammedia ஒரு வார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை பொலிஸ் மா அதிபரினால் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இன்றையதினம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு இணங்க காங்கேசன்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த பகுதி அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கசிப்பு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.