• Jan 04 2025

சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கிய கருணா!

Chithra / Dec 20th 2024, 7:37 am
image


கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் விசாரிக்கப்பட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 15 ம் திகதி கிழக்கு பல்கலைக்களக உபவேந்தர் கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு  மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத ஆயததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்

இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி  யினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் கருணா அம்மானை சி.ஐ.டி யினர் விசாரணைக்கு அழைத்ததையிட்டு அவர் நேற்று  கொழும்பிலுள்ள சி.ஐ டிக்கு சென்று வாக்குமூலங்களை வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.


சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கிய கருணா கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் விசாரிக்கப்பட்டார்.கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 15 ம் திகதி கிழக்கு பல்கலைக்களக உபவேந்தர் கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு  மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத ஆயததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி  யினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் கருணா அம்மானை சி.ஐ.டி யினர் விசாரணைக்கு அழைத்ததையிட்டு அவர் நேற்று  கொழும்பிலுள்ள சி.ஐ டிக்கு சென்று வாக்குமூலங்களை வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement