• Oct 28 2024

Tharmini / Oct 28th 2024, 9:33 am
image

Advertisement

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் வடமராட்சி கிழக்கு கழக வீரர்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட  மென்பந்தாட்ட தொடர் KSPL-05 இறுதி போட்டி  நேற்று முன்தினம் (26) சனிக்கிழமை இடம்பெற்றது.

சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

மென்பந்தாட்ட இறுதி போட்டியில் Rising Star அணியை எதிர்த்து Super Lions அணி மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Super Lions அணித்தலைவர் முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தார். 

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Rising Star அணி 12 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்றது.

109 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Super Lions அணியினர் 11 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 87 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தனர்.

சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தின் சீசன் 5 இற்கான மென்பந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை Rising Star அணியினர் தட்டிச் சென்றனர்.

முதலாம், இரண்டாம் அணியினருக்கு வெற்றிக் கேடயத்துடன் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதி போட்டியில் கட்டைக்காட்டுப்பங்குத்தந்தை ௮மல்றாஐ்,முள்ளியான் ௨ப தபால் ௮திபர் ௮ந்தோனி றோச் ஜொய்சி,வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு ௨த்தியோகத்தர் திரு.கவில்ராம், கட்டைக்காட்டு கடற்றொழில் கூட்டுறவு சங்க தலைவர் செ.செபஸ்ரியன், பொலிஸ் குழு ௨த்தியோகத்தர் பொ.செல்வராசா,நாடக மன்ற தலைவர் சு.முத்துராசா,அணி முகாமையாளர்கள்,

KSPL ௮ணி தலைவர்கள்,நிர்வாக ௨றுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கட்டைக்காடு சென்மேரிஸ், மென்பந்தாட்ட இறுதிப் போட்டி வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் வடமராட்சி கிழக்கு கழக வீரர்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட  மென்பந்தாட்ட தொடர் KSPL-05 இறுதி போட்டி  நேற்று முன்தினம் (26) சனிக்கிழமை இடம்பெற்றது.சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் தலைமையில் விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.மென்பந்தாட்ட இறுதி போட்டியில் Rising Star அணியை எதிர்த்து Super Lions அணி மோதியது.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Super Lions அணித்தலைவர் முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தார். இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Rising Star அணி 12 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்றது.109 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Super Lions அணியினர் 11 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 87 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தனர்.சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தின் சீசன் 5 இற்கான மென்பந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை Rising Star அணியினர் தட்டிச் சென்றனர்.முதலாம், இரண்டாம் அணியினருக்கு வெற்றிக் கேடயத்துடன் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.இறுதி போட்டியில் கட்டைக்காட்டுப்பங்குத்தந்தை ௮மல்றாஐ்,முள்ளியான் ௨ப தபால் ௮திபர் ௮ந்தோனி றோச் ஜொய்சி,வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு ௨த்தியோகத்தர் திரு.கவில்ராம், கட்டைக்காட்டு கடற்றொழில் கூட்டுறவு சங்க தலைவர் செ.செபஸ்ரியன், பொலிஸ் குழு ௨த்தியோகத்தர் பொ.செல்வராசா,நாடக மன்ற தலைவர் சு.முத்துராசா,அணி முகாமையாளர்கள்,KSPL ௮ணி தலைவர்கள்,நிர்வாக ௨றுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement