• Feb 03 2025

இந்திய மீனவர்கள் 10 பேருக்கு ஊர்காவற்றுறை நீதவான் பிறப்பித்த உத்தரவு

Chithra / Feb 3rd 2025, 2:50 pm
image


கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 10 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். 

வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார். 

அத்துடன் ஏனைய 8 பேருக்கம் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.

இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் படகோட்டிக்கு நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுவாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.


இந்திய மீனவர்கள் 10 பேருக்கு ஊர்காவற்றுறை நீதவான் பிறப்பித்த உத்தரவு கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரினது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கடந்த மாதம் 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இன்றையதினம் வரை இவர்களை விளக்கமறையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.இன்றையதினம் சிறைச்சாலை அதிகாரிகளால் 10 மீனவர்களும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் 10 பேரில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் ஏனைய 8 பேருக்கம் ஆறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறை தண்டனை வழங்கி நிபந்தனயுடன் விடுதலை செய்தார்.இந்த எட்டு பேரில் ஒருவர் படகோட்டி என்பதால் அவருக்கு ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் படகோட்டிக்கு நான்கு மில்லியன் ரூபா அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் நளினி சுவாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement