சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.
கெஹலிய அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடித்தால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச அதிகாரியொருவர் நிதி மோசடி, பயங்கரவாத செயல் உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அவரது பணி இடைநிறுத்தப்படும்.
கெஹலிய அமைச்சரவையை பிழையாக வழிநடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அறிவித்துள்ளார்.
மேலும்,கெஹலிய தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகித்தால் சர்வதேச ரீதியில் இலங்கை அமைச்சரவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையிலிருந்து நீக்கப்படும் கெஹலிய. - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.கெஹலிய அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடித்தால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அரச அதிகாரியொருவர் நிதி மோசடி, பயங்கரவாத செயல் உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அவரது பணி இடைநிறுத்தப்படும்.கெஹலிய அமைச்சரவையை பிழையாக வழிநடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக சட்ட மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அறிவித்துள்ளார்.மேலும்,கெஹலிய தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகித்தால் சர்வதேச ரீதியில் இலங்கை அமைச்சரவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என நிபுணத்துவ மருத்துவர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.