• Nov 23 2024

மக்கள் போராட்டத்தை குழப்ப சதி - மோசடிகளை மறைக்க பின்னணியில் கேதீஸ்வரன்?

Tamil nila / Jul 7th 2024, 9:25 pm
image

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, தென்மராட்சி மக்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பம் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யாழ்ப்பாண பிராந்திக்க சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என தென்மராட்சி மக்களினால் நாளை திங்கட்கிழமை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் மீது சாவகச்சேரியின் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்தியர் அர்சுனா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அவரை அகற்றுவதன் மூலம் தனது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை தூண்டி விடுவதாக வைத்தியத்துறை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.


மக்கள் போராட்டத்தை குழப்ப சதி - மோசடிகளை மறைக்க பின்னணியில் கேதீஸ்வரன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக, தென்மராட்சி மக்களால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பம் வகையில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை யாழ்ப்பாண பிராந்திக்க சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என தென்மராட்சி மக்களினால் நாளை திங்கட்கிழமை போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தை குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஆதார வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் மீது சாவகச்சேரியின் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்தியர் அர்சுனா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அவரை அகற்றுவதன் மூலம் தனது ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக வைத்திய அதிகாரிகள் சங்கத்தை தூண்டி விடுவதாக வைத்தியத்துறை சார்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement