• May 21 2024

ரஷ்ய - உக்ரேன் போருக்காக இராணுவ வீரர்களை கடத்தும் கும்பல் - தகவல்களைப் பெற சிறப்புப் பிரிவு

Chithra / May 10th 2024, 1:40 pm
image

Advertisement


ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களைச் சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக  பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி,  ரஷ்ய - உக்ரேன் போருக்கு சம்பந்தப்பட்டுள்ள  ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை,

உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112 441 146 ஊடாக பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற  மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குருநாகல், வெவரும பிரதேசத்தில்  கைது செய்துள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவ தலைமையகத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் பட்டியலை எடுத்துச் சென்றது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலிப்படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரஷ்ய - உக்ரேன் போருக்காக இராணுவ வீரர்களை கடத்தும் கும்பல் - தகவல்களைப் பெற சிறப்புப் பிரிவு ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களைச் சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக  பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி,  ரஷ்ய - உக்ரேன் போருக்கு சம்பந்தப்பட்டுள்ள  ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை,உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112 441 146 ஊடாக பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற  மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குருநாகல், வெவரும பிரதேசத்தில்  கைது செய்துள்ளது.ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இராணுவ தலைமையகத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் பட்டியலை எடுத்துச் சென்றது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலிப்படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement