• Nov 28 2024

184 ஓட்டங்களால் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி முன்னிலையில்!samugammedia

Tamil nila / Dec 8th 2023, 8:18 pm
image

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிகள் மோதும் 12வது வடக்கின் நீலங்களின் சமர் இன்றும் நாளையும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.


குறித்த போட்டியானது  2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .நாட்டின் அசாதாரண சூழ் நிலை மற்றும் கொவிட் காரணமாக சில ஆண்டுகள் நடைபெறவில்லை இது வரை நடைபெற்ற 11போட்டிகள் கிளிநொச்சி இந்துக்கல்லூரி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் இரண்டு போட்டிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றிருக்கிறது. 


ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.12வது நீலங்களின் சமருக்கு கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கு த.தமிழவன் தலைமை தாங்கும் அதே வேளை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு த.அபிராஜ் தலைமை தாங்குகின்றனர்.

இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி  42பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 252 ஓட்டங்களுக்கு 8இலக்குகளை இழந்த  நிலையில் இந்துக்கல்லூரி அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. 



அதற்கமைய துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர 47 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில்  68ஓட்டங்களுக்கு 07 இலக்குகளை இழந்திருந்தது.

இன்றைய முதல் நாள் போட்டியில் 

மத்திய மகா வித்தியாலய அணி சார்பாக P-பவலன் 96பந்துகளில் 131 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சார்பாக  K. நேனுசன் 07 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.




184 ஓட்டங்களால் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி முன்னிலையில்samugammedia வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணிகள் மோதும் 12வது வடக்கின் நீலங்களின் சமர் இன்றும் நாளையும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.குறித்த போட்டியானது  2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .நாட்டின் அசாதாரண சூழ் நிலை மற்றும் கொவிட் காரணமாக சில ஆண்டுகள் நடைபெறவில்லை இது வரை நடைபெற்ற 11போட்டிகள் கிளிநொச்சி இந்துக்கல்லூரி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் இரண்டு போட்டிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.12வது நீலங்களின் சமருக்கு கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிக்கு த.தமிழவன் தலைமை தாங்கும் அதே வேளை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு த.அபிராஜ் தலைமை தாங்குகின்றனர்.இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி  42பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 252 ஓட்டங்களுக்கு 8இலக்குகளை இழந்த  நிலையில் இந்துக்கல்லூரி அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கமைய துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர 47 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில்  68ஓட்டங்களுக்கு 07 இலக்குகளை இழந்திருந்தது.இன்றைய முதல் நாள் போட்டியில் மத்திய மகா வித்தியாலய அணி சார்பாக P-பவலன் 96பந்துகளில் 131 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி சார்பாக  K. நேனுசன் 07 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement