• Nov 25 2024

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா...!samugammedia

Sharmi / Feb 17th 2024, 4:02 pm
image

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று(17)  இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் வாசுதேவன்  தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கல்வியற் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, வடக்கு வலய பதிவாளர் நாயகம் சிவநயனி சர்வேஸ்வரா ஆகியோர் பிரதம விருத்திகர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து தமிழிற்கு அழப்பெரும் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த ஜீவரஞ்சினி விவேகானந்தராஜா ஆசிரியருக்கு "தமிழ் அன்னை" விருது வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த ஆசிரியையின் திரு உருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து குறித்த விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகள் மற்றும்  தமிழ்த்தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், வலயக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா.samugammedia கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று(17)  இடம்பெற்றது.இன்று காலை 9 மணியளவில் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் வாசுதேவன்  தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கல்வியற் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா, வடக்கு வலய பதிவாளர் நாயகம் சிவநயனி சர்வேஸ்வரா ஆகியோர் பிரதம விருத்திகர்களாக கலந்து கொண்டனர்.நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.தொடர்ந்து தமிழிற்கு அழப்பெரும் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த ஜீவரஞ்சினி விவேகானந்தராஜா ஆசிரியருக்கு "தமிழ் அன்னை" விருது வழங்கி வைக்கப்பட்டது.குறித்த ஆசிரியையின் திரு உருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து குறித்த விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகள் மற்றும்  தமிழ்த்தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில், வலயக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement