• Nov 23 2024

கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த கிளிநொச்சி மாணவன்..!

Sharmi / Sep 30th 2024, 10:08 am
image

தேசிய ரீதியில் நடைபெற்ற பல்கலை கழகங்களுக்கு இடையிலான இருவர் பங்குபற்றும் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தை பிரதிநிதிபடுத்தும் போட்டியில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழக வீரனும் பல்கலைகழக மாணவனுமாகிய  நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி பல்கலைக் கழகங்கங்களுக்கிடையிலான தேசிய போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.

குழுநிலை போட்டியில் மூன்று அணிகளை வீழ்த்தி குழு நிலையில் முதல் நிலை பிடித்து காலிறுதி போட்டியில் வயம்ப பல்கலைகழகத்தையும் அரையிறுதி போட்டியில் யாழ் பல்கலைக் கழகத்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் சப்பிரகமுவ பல்கலை கழகத்திடம் 1:1 சமநிலையில்  இறுதி சுற்றில் 14:13 என்ற அடிப்படையில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டது.

நாகராசா நிசாந்தன் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி  விளையாட்டுக் கழகத்தின் வீரன். இவர் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழக கடற்கரை கரப்பந்தாட்ட அணி கரைச்சி பிரதேச செயலக பிரிவு, கிளிநொச்சி மாவட்டம்,வடக்கு மாகாண மட்டங்களில்  மேற்படி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டி இவ்வருடம் யூன் மாதம் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய போட்டிக்கு செல்லவிருந்த நிலையில், அவர்கள் மாவட்ட மட்டத்தில் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.

எனவே, ஏன் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலரிடம் வினவிய போது,  நீர்கொழும்பில் மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டும். ஒரு நாள் தங்குமிட செலவு 8500 ரூபா தேவைப்படுகிறது. 

ஆனால் குறித்த நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக தேசிய போட்டிக்கு  வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாது போய்விட்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த கிளிநொச்சி வீரன் தான் கற்கும் பல்கலைக் கழக அணியில் விளையாடி, பல்கலைக் கழகளுக்கிடையிலான தேசிய  போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியில் சாதித்த கிளிநொச்சி மாணவன். தேசிய ரீதியில் நடைபெற்ற பல்கலை கழகங்களுக்கு இடையிலான இருவர் பங்குபற்றும் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தை பிரதிநிதிபடுத்தும் போட்டியில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழக வீரனும் பல்கலைகழக மாணவனுமாகிய  நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி பல்கலைக் கழகங்கங்களுக்கிடையிலான தேசிய போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.குழுநிலை போட்டியில் மூன்று அணிகளை வீழ்த்தி குழு நிலையில் முதல் நிலை பிடித்து காலிறுதி போட்டியில் வயம்ப பல்கலைகழகத்தையும் அரையிறுதி போட்டியில் யாழ் பல்கலைக் கழகத்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் சப்பிரகமுவ பல்கலை கழகத்திடம் 1:1 சமநிலையில்  இறுதி சுற்றில் 14:13 என்ற அடிப்படையில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டது.நாகராசா நிசாந்தன் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி  விளையாட்டுக் கழகத்தின் வீரன். இவர் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழக கடற்கரை கரப்பந்தாட்ட அணி கரைச்சி பிரதேச செயலக பிரிவு, கிளிநொச்சி மாவட்டம்,வடக்கு மாகாண மட்டங்களில்  மேற்படி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டி இவ்வருடம் யூன் மாதம் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய போட்டிக்கு செல்லவிருந்த நிலையில், அவர்கள் மாவட்ட மட்டத்தில் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.எனவே, ஏன் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலரிடம் வினவிய போது,  நீர்கொழும்பில் மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டும். ஒரு நாள் தங்குமிட செலவு 8500 ரூபா தேவைப்படுகிறது. ஆனால் குறித்த நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக தேசிய போட்டிக்கு  வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாது போய்விட்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் குறித்த கிளிநொச்சி வீரன் தான் கற்கும் பல்கலைக் கழக அணியில் விளையாடி, பல்கலைக் கழகளுக்கிடையிலான தேசிய  போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டுவந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement