• Jan 11 2025

கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைவு..!

Sharmi / Jan 1st 2025, 10:44 am
image

கிளீன் ஶ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய  நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டின் அரச சேவைகளை முன்னெடுக்க, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களும் இன்று ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில், பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதன்பின்னர், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும், இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், மாநாட்டு மண்டபத்தில் ஒன்று கூடிய பிரதேச செயலக ஊழியர்கள், ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனைத்து வெகுசன ஊடகங்கள் மூலமாகவும் ஒலி ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் ஊழியர்கள் இணைந்து, புத்தாண்டில் நாட்டின் எதிர்கால சுபிட்சத்துக்காக, ஒருங்கிணைந்து பணியாற்ற, சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.



கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைவு. கிளீன் ஶ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய  நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டின் அரச சேவைகளை முன்னெடுக்க, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களும் இன்று ஆரம்பித்தனர்.இந்த நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில், பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக காலை 8.30 மணிக்கு பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.அதன்பின்னர், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும், இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும், மாநாட்டு மண்டபத்தில் ஒன்று கூடிய பிரதேச செயலக ஊழியர்கள், ஜனாதிபதி செயலகத்திலிருந்து அனைத்து வெகுசன ஊடகங்கள் மூலமாகவும் ஒலி ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் தேசிய விழாவுடன் ஊழியர்கள் இணைந்து, புத்தாண்டில் நாட்டின் எதிர்கால சுபிட்சத்துக்காக, ஒருங்கிணைந்து பணியாற்ற, சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement