கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியுடன் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குழுவினருடனான சந்திப்பு இன்று (27) கிண்ணியா நகர சபையில் இடம் பெற்றது.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ,கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளர், உறுப்பினர்களான சனான் முகமட், நிஸார்தீன், ரசாட் முகமட், வேந்தன் மற்றும் தீசன் என பலர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது கிண்ணியா நகர சபை தற்போது முகம் கொடுக்கின்ற சவால்கள், எதிர்கால வேலை திட்டங்கள், கழிவு முகாமைத்துவ நிலைய பிரச்சினைகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிண்ணியா நகர சபை தவிசாளர் - கஜேந்திரகுமார் எம்.பி சந்திப்பு கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியுடன் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குழுவினருடனான சந்திப்பு இன்று (27) கிண்ணியா நகர சபையில் இடம் பெற்றது.இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ,கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளர், உறுப்பினர்களான சனான் முகமட், நிஸார்தீன், ரசாட் முகமட், வேந்தன் மற்றும் தீசன் என பலர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது கிண்ணியா நகர சபை தற்போது முகம் கொடுக்கின்ற சவால்கள், எதிர்கால வேலை திட்டங்கள், கழிவு முகாமைத்துவ நிலைய பிரச்சினைகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.