• Oct 29 2025

குழந்தையை கொன்று தாயும் உயிர்மாய்ப்பு; காலியில் சம்பவம் - விசாரணைகள் தீவிரம்!

shanuja / Oct 27th 2025, 9:01 pm
image

குழந்தையைக் கொன்று தாயொருவரும் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தச் சம்பவம் காலி - படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில்  பதிவாகியுள்ளது. 


படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.  


குறித்த பெண், வெளிநாடொன்றுக்கு பணிக்காக சென்று சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.


இந்த பெண்ணின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட மகன், பெண்ணின் தந்தையின் பொறுப்பிலேயே வளர்ந்து வந்துள்ளது.


இந்த நிலையில் குறித்த பெண் தனது குழந்தையைக் கொலை செய்து பின்னர் தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


விசாரணையை அடுத்து குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக  முன்னெடுத்து வருகின்றனர்.

குழந்தையை கொன்று தாயும் உயிர்மாய்ப்பு; காலியில் சம்பவம் - விசாரணைகள் தீவிரம் குழந்தையைக் கொன்று தாயொருவரும் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காலி - படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில்  பதிவாகியுள்ளது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த பெண், வெளிநாடொன்றுக்கு பணிக்காக சென்று சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.இந்த பெண்ணின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட மகன், பெண்ணின் தந்தையின் பொறுப்பிலேயே வளர்ந்து வந்துள்ளது.இந்த நிலையில் குறித்த பெண் தனது குழந்தையைக் கொலை செய்து பின்னர் தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையை அடுத்து குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக  முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement