• Nov 26 2024

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்...! யாழில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட ஆய்வு...!samugammedia

Sharmi / Dec 15th 2023, 9:49 am
image

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் வயது பாலினம் ஆகியவற்றை  அடையாளம் காண இம்மாதம் 21 ம் 22 ம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.என சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா  நீதிமன்றில் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (14) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி  தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா  குறித்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்

குறித்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்,

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் வருடம் மார்ச் மாதம்  இந்த அகழ்வுப்பணி தொடர்பில் ஆராயப்பட்டது

இந்த அகழ்வுப்பணிக்கான செலவுகள் குறிப்பாக  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அந்த வீதி உடைக்கப்பட்டு திருத்தப்படுவதற்கு தேவையான பணம் உள்ளிட்ட  விடயங்கள் குறித்து பேசப்பட்டது

அத்தோடு  ஏற்கனவே எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது  

ஏற்கனவே திட்டமிட்டபடி  மார்ச் மாதம் முதலாம் திகதி வேலைகளை ஆரம்பிப்பதற்காக  இந்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 22 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாகவும்  மேலும் தெரிவித்தார்.





கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம். யாழில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட ஆய்வு.samugammedia கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் வயது பாலினம் ஆகியவற்றை  அடையாளம் காண இம்மாதம் 21 ம் 22 ம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.என சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா  நீதிமன்றில் தெரிவித்துள்ளார்முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (14) முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி  தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.இதன்போதே சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா  குறித்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்குறித்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்,கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் வருடம் மார்ச் மாதம்  இந்த அகழ்வுப்பணி தொடர்பில் ஆராயப்பட்டதுஇந்த அகழ்வுப்பணிக்கான செலவுகள் குறிப்பாக  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அந்த வீதி உடைக்கப்பட்டு திருத்தப்படுவதற்கு தேவையான பணம் உள்ளிட்ட  விடயங்கள் குறித்து பேசப்பட்டதுஅத்தோடு  ஏற்கனவே எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது  ஏற்கனவே திட்டமிட்டபடி  மார்ச் மாதம் முதலாம் திகதி வேலைகளை ஆரம்பிப்பதற்காக  இந்த வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 22 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாகவும்  மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement