• Jun 04 2026

தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் கோப்பாய் பொலிஸார் வாக்குமூலம்!

shanu / Jun 4th 2026, 4:38 pm
image

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

  

தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக உத்தியோகபூர்வமாக உணர்வுவெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  

இந்நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோப்பாய் பொலிசாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றுள்ளனர்.


தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் கோப்பாய் பொலிஸார் வாக்குமூலம் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.  தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக உத்தியோகபூர்வமாக உணர்வுவெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோப்பாய் பொலிசாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலங்களை பொலிஸார் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement