• May 11 2024

தனக்கு எதிரான சதியை அறியாமல் இருந்த கோட்டா? வெளிவரும் தகவல்கள்

Chithra / Jan 25th 2023, 11:17 am
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அப்போது அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதனால்தான் அவர் வெளியேற வேண்டியிருந்தது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொள்ளத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் அளவே தற்போதும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் தற்போது எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான சதியை அறியாமல் இருந்த கோட்டா வெளிவரும் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அப்போது அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தமக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதனால்தான் அவர் வெளியேற வேண்டியிருந்தது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொள்ளத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் அளவே தற்போதும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் தற்போது எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement