• Mar 06 2025

கொட்டாஞ்சேனை OICக்கு கொலை மிரட்டல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Chithra / Mar 5th 2025, 3:26 pm
image

 

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார், மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அடையாளம் காட்ட அழைத்துச் சென்ற போது, ​​பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, ​​ பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்றதுடன், சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோசல லியனாராச்சிக்கு உள்ளூர் தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை OICக்கு கொலை மிரட்டல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு  கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி இரவு, கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார், மட்டக்குளியில் உள்ள காக்கைத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை அடையாளம் காட்ட அழைத்துச் சென்ற போது, ​​பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, ​​ பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்றதுடன், சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோசல லியனாராச்சிக்கு உள்ளூர் தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement