இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று வியாழன் இரவு வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி 410 இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது, இது 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மைக்கு போதுமானது. 14 ஆண்டுகளாக ஆட்சி செய்த ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 131 இடங்களையும், லிபரல் டெமாக்ராட்ஸ் 61 இடங்களையும், சீர்திருத்த யுகே 13 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
2010, 2015, 2017 , 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கடைசி நான்கு தேர்தல்களின் முடிவுகளை துல்லியமாக கணித்ததில் பிபிசி, ஐடிவி , ஸ்கை ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகளும் இதனையே தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையை வெல்லும் என்கிறது கருத்துக்கணிப்பு இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று வியாழன் இரவு வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி 410 இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்பு காட்டுகிறது, இது 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மைக்கு போதுமானது. 14 ஆண்டுகளாக ஆட்சி செய்த ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 131 இடங்களையும், லிபரல் டெமாக்ராட்ஸ் 61 இடங்களையும், சீர்திருத்த யுகே 13 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.2010, 2015, 2017 , 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கடைசி நான்கு தேர்தல்களின் முடிவுகளை துல்லியமாக கணித்ததில் பிபிசி, ஐடிவி , ஸ்கை ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகளும் இதனையே தெரிவிக்கின்றன.