• Nov 26 2024

நாடாளுமன்றத்தை முற்றுகையிட அழைப்பு விடுத்த லால்காந்தவை உடன் கைது செய்ய வேண்டும்! உதய கம்மன்பில

Chithra / Aug 8th 2024, 9:06 am
image

 

இலங்கை பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

2022 ஆம் ஆண்டு போராட்டகாரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட வந்தார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் லால் காந்த, பாராளுமன்றத்தை முற்றுகையிட நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். போராட்டகாரர்களில் ஒரு தரப்பினர் அதற்கு இடமளிக்காத காரணத்தால் நோக்கம் வெற்றிப் பெறவில்லை' என்று தற்போது குறிப்பிட்டுள்ளார். 

பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டிருந்தால் இலங்கையில் இன்றும் தீ பற்றியெரிந்திருக்கும், பங்களாதேஸ் நாட்டின் நிலைமையே தோற்றம் பெற்றிருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் டீல் அரசியல் இல்லையாயின் லால் காந்தை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

ஏனெனில்  ஒரு குற்றச்செயலுக்கு அழைப்பு விடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமே என்றார்.

மேலும் இலங்கையில் தோற்றம் பெற்ற அரகலயவின்   பிரதான சூத்திரதாரி அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அதேபோல் பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தின் பிரதான சூத்திரதாரி அமெரிக்க தூதுவர் பீற்றர் ஹாஸ் என்பது வெகுவிரைவில் வெளிவரும். என்றார்.


நாடாளுமன்றத்தை முற்றுகையிட அழைப்பு விடுத்த லால்காந்தவை உடன் கைது செய்ய வேண்டும் உதய கம்மன்பில  இலங்கை பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.பாராளுமன்றத்தில்  நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டு போராட்டகாரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட வந்தார்கள்.மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் லால் காந்த, பாராளுமன்றத்தை முற்றுகையிட நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். போராட்டகாரர்களில் ஒரு தரப்பினர் அதற்கு இடமளிக்காத காரணத்தால் நோக்கம் வெற்றிப் பெறவில்லை' என்று தற்போது குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டிருந்தால் இலங்கையில் இன்றும் தீ பற்றியெரிந்திருக்கும், பங்களாதேஸ் நாட்டின் நிலைமையே தோற்றம் பெற்றிருக்கும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் டீல் அரசியல் இல்லையாயின் லால் காந்தை உடனடியாக கைது செய்ய வேண்டும்.ஏனெனில்  ஒரு குற்றச்செயலுக்கு அழைப்பு விடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமே என்றார்.மேலும் இலங்கையில் தோற்றம் பெற்ற அரகலயவின்   பிரதான சூத்திரதாரி அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அதேபோல் பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தின் பிரதான சூத்திரதாரி அமெரிக்க தூதுவர் பீற்றர் ஹாஸ் என்பது வெகுவிரைவில் வெளிவரும். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement