• Nov 21 2024

காணி கொள்வனவு விவகாரம்- நீதிமன்றில் ஆஜராகுமாறு பசிலுக்கு நோட்டீஸ்..!

Sharmi / Oct 26th 2024, 11:28 am
image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் விசாரணைத் திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் விசாரணைத் திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அதேவேளை, காணி கொள்வனவு செய்யப்பட்ட விதம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த காணி கனடாவில் வசிக்கும் பசில் ராஜபக்சவின் மனைவியின் சகோதரியின் பெயரில் ஜேர்மன் பிரஜை ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை வாங்க அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எனினும், பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறியதால் இந்த வழக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 


காணி கொள்வனவு விவகாரம்- நீதிமன்றில் ஆஜராகுமாறு பசிலுக்கு நோட்டீஸ். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் விசாரணைத் திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது,மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் விசாரணைத் திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.அதேவேளை, காணி கொள்வனவு செய்யப்பட்ட விதம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்றது.குறித்த காணி கனடாவில் வசிக்கும் பசில் ராஜபக்சவின் மனைவியின் சகோதரியின் பெயரில் ஜேர்மன் பிரஜை ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலத்தை வாங்க அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.எனினும், பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறியதால் இந்த வழக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement