• Nov 21 2024

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

Sharmi / Oct 26th 2024, 11:43 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (25), இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் இந்த வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிலிருந்து 41,700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (25), இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் இந்த வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிலிருந்து 41,700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement