• Apr 28 2025

கூகுள் மப்பில் எல்லையிட்ட காணிகள் மீளாய்வு செய்து விடுவிக்கப்படும்! ஜனாதிபதி அனுர

Chithra / Apr 27th 2025, 8:07 am
image


வடக்கில் போர் முடிவடைந்த பின்னர் வனவளத்திணைக்களம் கூகுள் வரைபடத்தினை பார்த்து காணிகளுக்கு எல்லையிட்டது. அது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

எமது பரம்பரை யுத்தம் செய்தது. ஆனால் அடுத்த பிள்ளைகளின் பரம்பரைக்கும் அதனை விடமாட்டோம். பிரிவினை வாத அரசியல் முடிவிற்கு வந்தது. இழந்த ஒற்றுமையை நிச்சயம் கட்டி எழுப்புவோம். இனவாதத்தை இல்லாமல் செய்து தேசிய ஒற்றுமையை வளர்ப்போம். 

வடக்கில் பல இடங்கள் போரால் பாதிக்கப்பட்டது. வீடுகளை இழந்தனர், பாதைகளை இழந்தனர், தாய்மார்கள் பிள்ளைகளையும், கணவர்களை மனைவிமாரும் இழந்தார்கள்,

நண்பர்களை இழந்தனர் கவலையான பாரிய ஒரு நிலமை தான் இருந்தது. அதுதான் யுத்தம். தற்போது போர் முடிந்து 16 வருடங்கள் கழிந்துள்ளது. இன்னும் அதன் மிச்ச சொற்பங்கள் இருக்கின்றன.

யாழில் திஸ்சவிகாரை தொடர்பாக ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்ன பிரச்சனை. அந்த காணிகளின் உரிமையாளர்களும் பன்சாலையின் பிக்குமாருக்கும் அந்த பிரச்சனையை தீர்க்க இடமளித்தால் அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள். தீர்க்க இடமளிக்காமல் இருப்பது. அரசியல். அவர்களுக்கு தேவை இதனூடாக இனவாதத்தை தூண்டுவது. 

வடக்கின் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அந்த இடத்திலே ஒரு முறுகல் நிலையை ஏற்ப்படுத்த முனைகின்றனர். தென்பகுதியில் தோல்விகண்ட அரசியல் தலைவர்கள் அங்கே அங்கே ஒரு முரன்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள். 

நாங்கள் காணி உரிமையாளர்கள் பிக்குமார்கள் இடையில் இணக்கபாட்டை ஏற்படுத்துவோம். இந்த பிரச்சனை தீர்க்க முடியும். சட்டங்களை புதிதாக அமைத்தாவது இனவாதத்தை களைவோம். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும்.தமிழ் பேசும் திறமையானவர்களை இலங்கை கிரிக்கேட் அணியில் இணைக்கவேண்டும். 

தேர்தல் காலங்களின் போது தேர்தல் அலுவலகங்களை தீயிட்டு எரித்தமை தொடர்பாக நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம்.ஆனால் யாழில் நூலகத்தை எரித்தார்கள். உலகில் எங்கும் அப்படி நடக்கவில்லை. நாங்கள் அதற்கு 10 கோடிகள் ஒதுக்கியுள்ளோம்.

போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை பார்த்தே வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் மக்களின் காணிகள் எடுத்தார்கள். அந்த காணிகளை நேரடியாக சென்று பார்த்து அதனை அளந்து எடுக்கவில்லை. காடாக இருக்கும் காணிகளை பார்த்தார்கள் எடுத்தார்கள்.

மக்களின் காணிகள் அதற்குள்ளே இருக்கிறது. விவசாய காணிகள் உள்ளது. குளங்கள் உள்ளது. எனவே மீண்டும் அதனை ஆய்வு செய்து அனைத்து காணிகளும் இந்த மக்களுக்குபெற்றுக்கொடுப்போம். 

நெற் களஞ்சியசாலைகள் பல உள்ளது. நெல்கொள்வனவுக்காக நாங்கள் 500 கோடிகள் வழங்கினோம். ஒரு விலையையும் நிர்ணயித்தோம். அந்தவிலையை விட குறைந்தால் எங்களுக்கு தாருங்கள். விலை கூடினால் தனியாருக்கு வழங்குங்கள் பரவாயில்லை. 

நெல் விலை குறைந்தால் அரசு கொள்வனவு செய்யும். கூடினால் அவர்கள் எடுப்பார்கள். அந்த முறையை நாங்கள் செய்தோம். இந்த போகத்தில் நெல் விலை குறைந்ததா. இனி ஒருபோதும் நெல் விலை குறையாது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

கூகுள் மப்பில் எல்லையிட்ட காணிகள் மீளாய்வு செய்து விடுவிக்கப்படும் ஜனாதிபதி அனுர வடக்கில் போர் முடிவடைந்த பின்னர் வனவளத்திணைக்களம் கூகுள் வரைபடத்தினை பார்த்து காணிகளுக்கு எல்லையிட்டது. அது தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.வவுனியாவில் இடம்பெற்ற தேசியமக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…எமது பரம்பரை யுத்தம் செய்தது. ஆனால் அடுத்த பிள்ளைகளின் பரம்பரைக்கும் அதனை விடமாட்டோம். பிரிவினை வாத அரசியல் முடிவிற்கு வந்தது. இழந்த ஒற்றுமையை நிச்சயம் கட்டி எழுப்புவோம். இனவாதத்தை இல்லாமல் செய்து தேசிய ஒற்றுமையை வளர்ப்போம். வடக்கில் பல இடங்கள் போரால் பாதிக்கப்பட்டது. வீடுகளை இழந்தனர், பாதைகளை இழந்தனர், தாய்மார்கள் பிள்ளைகளையும், கணவர்களை மனைவிமாரும் இழந்தார்கள்,நண்பர்களை இழந்தனர் கவலையான பாரிய ஒரு நிலமை தான் இருந்தது. அதுதான் யுத்தம். தற்போது போர் முடிந்து 16 வருடங்கள் கழிந்துள்ளது. இன்னும் அதன் மிச்ச சொற்பங்கள் இருக்கின்றன.யாழில் திஸ்சவிகாரை தொடர்பாக ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்ன பிரச்சனை. அந்த காணிகளின் உரிமையாளர்களும் பன்சாலையின் பிக்குமாருக்கும் அந்த பிரச்சனையை தீர்க்க இடமளித்தால் அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள். தீர்க்க இடமளிக்காமல் இருப்பது. அரசியல். அவர்களுக்கு தேவை இதனூடாக இனவாதத்தை தூண்டுவது. வடக்கின் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அந்த இடத்திலே ஒரு முறுகல் நிலையை ஏற்ப்படுத்த முனைகின்றனர். தென்பகுதியில் தோல்விகண்ட அரசியல் தலைவர்கள் அங்கே அங்கே ஒரு முரன்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள். நாங்கள் காணி உரிமையாளர்கள் பிக்குமார்கள் இடையில் இணக்கபாட்டை ஏற்படுத்துவோம். இந்த பிரச்சனை தீர்க்க முடியும். சட்டங்களை புதிதாக அமைத்தாவது இனவாதத்தை களைவோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும்.தமிழ் பேசும் திறமையானவர்களை இலங்கை கிரிக்கேட் அணியில் இணைக்கவேண்டும். தேர்தல் காலங்களின் போது தேர்தல் அலுவலகங்களை தீயிட்டு எரித்தமை தொடர்பாக நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம்.ஆனால் யாழில் நூலகத்தை எரித்தார்கள். உலகில் எங்கும் அப்படி நடக்கவில்லை. நாங்கள் அதற்கு 10 கோடிகள் ஒதுக்கியுள்ளோம்.போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை பார்த்தே வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் மக்களின் காணிகள் எடுத்தார்கள். அந்த காணிகளை நேரடியாக சென்று பார்த்து அதனை அளந்து எடுக்கவில்லை. காடாக இருக்கும் காணிகளை பார்த்தார்கள் எடுத்தார்கள்.மக்களின் காணிகள் அதற்குள்ளே இருக்கிறது. விவசாய காணிகள் உள்ளது. குளங்கள் உள்ளது. எனவே மீண்டும் அதனை ஆய்வு செய்து அனைத்து காணிகளும் இந்த மக்களுக்குபெற்றுக்கொடுப்போம். நெற் களஞ்சியசாலைகள் பல உள்ளது. நெல்கொள்வனவுக்காக நாங்கள் 500 கோடிகள் வழங்கினோம். ஒரு விலையையும் நிர்ணயித்தோம். அந்தவிலையை விட குறைந்தால் எங்களுக்கு தாருங்கள். விலை கூடினால் தனியாருக்கு வழங்குங்கள் பரவாயில்லை. நெல் விலை குறைந்தால் அரசு கொள்வனவு செய்யும். கூடினால் அவர்கள் எடுப்பார்கள். அந்த முறையை நாங்கள் செய்தோம். இந்த போகத்தில் நெல் விலை குறைந்ததா. இனி ஒருபோதும் நெல் விலை குறையாது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement