• Oct 18 2024

மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்! samugammedia

Tamil nila / May 2nd 2023, 5:34 pm
image

Advertisement

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது.

குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் samugammedia 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இன்று காலை முதல் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வருகின்றது.குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement