• Nov 24 2024

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு- அவதானம் மக்களே!

Tamil nila / Oct 12th 2024, 7:52 pm
image

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 ஆம் கட்டத்தின் கீழும், முதலாம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் – சீதாவாக்கை, பாதுக்கை களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹ_பிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை, காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, நியாகம களுத்துறை மாவடடத்தில்; பேருவளை கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு- அவதானம் மக்களே நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்துள்ளார்.அதற்கமைய, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 ஆம் கட்டத்தின் கீழும், முதலாம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் – சீதாவாக்கை, பாதுக்கை களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹ_பிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பதுளை மாவட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை, காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, நியாகம களுத்துறை மாவடடத்தில்; பேருவளை கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement