• Mar 01 2025

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Tharmini / Mar 1st 2025, 1:12 pm
image

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளது.

பதுளை, பசறை, லுனுகலை, ஹாலிஎல, ஊவாபரணகம, சொரணத்தோட்ட மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஆறுகள், ஓடைகள், நீரேந்து பிரதேசங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்றும் 85 மில்லி மீற்றகும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இதேவேளை, அதிகாலை வேளையில் கடும் குளிரான காலநிலை வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கையை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ளது.பதுளை, பசறை, லுனுகலை, ஹாலிஎல, ஊவாபரணகம, சொரணத்தோட்ட மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஆறுகள், ஓடைகள், நீரேந்து பிரதேசங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இன்றும் 85 மில்லி மீற்றகும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.இதேவேளை, அதிகாலை வேளையில் கடும் குளிரான காலநிலை வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement