• Sep 08 2024

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி- மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா கிங்ஸ் அணி!

Tamil nila / Jul 21st 2024, 8:23 am
image

Advertisement

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டங்களால் ஜப்னா அணி வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃபால்கன்ஸ் அணித்தலைவர், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

ஜப்னா அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார்.

188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கண்டி அணி சார்பாக அன்ட்ரே பிளெட்சர் 38 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜப்னா அணி சார்பாக பெபியன் ஆலன் 04 விக்கெட்டுக்களையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

மேலும் இன்று மாலை இடம்பெறும் இறுதிப் போட்டியில் காலி மார்வெல்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.

அத்துடன் ஜப்னா அணி மூன்று முறை லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி- மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டங்களால் ஜப்னா அணி வெற்றிபெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃபால்கன்ஸ் அணித்தலைவர், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.ஜப்னா அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார்.188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.கண்டி அணி சார்பாக அன்ட்ரே பிளெட்சர் 38 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் ஜப்னா அணி சார்பாக பெபியன் ஆலன் 04 விக்கெட்டுக்களையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.மேலும் இன்று மாலை இடம்பெறும் இறுதிப் போட்டியில் காலி மார்வெல்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் எதிர்கொள்ளவுள்ளது.அத்துடன் ஜப்னா அணி மூன்று முறை லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement