• Jun 16 2024

“யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளில் செயற்றிட்ட அறிமுக விழா

Chithra / May 22nd 2024, 3:38 pm
image

Advertisement

 


யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில், உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு, யாழ் மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா நேற்று (21.05.2024) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டத்தில் இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாண பண்பாட்டினை பறைசார்ற்றும் யாழ். மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட கைந்நூல் வழங்கலும், பாடல் இசைத்தட்டும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இதில் முதற் பிரதியினை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை வெளியிட்டு வைக்க,

யாழ்ப்பாணப் பெட்டகம் நிறுவகத்தின் ஸ்தாபகர் திருமதி விஜிதா பாலதாஸ் அதனை பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கு கைந்நூல்களும், இறுவெட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து வடமாகாண முழுவதும் சமூக அக்கறை கொண்டு மகத்தான பணிகளை முன்னெடுத்து வரும் சமூக நல்லுள்ளங்களுக்கான விருதுகளும், கெளரவிப்பும் வழங்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் போராசிரியர்களாகிய கலாநிதி ம.கிருஷ்ணராஜா, சண்முகலிங்கன், மற்றும் சமூக நலன்விரும்பிகள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


“யாழ் மண்ணே வணக்கம்” என்னும் கருப்பொருளில் செயற்றிட்ட அறிமுக விழா  யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் ஆகியவற்றின் இணைந்த எற்பாட்டில், உலக பண்பாட்டுத்தினத்தினை முன்னிட்டு, யாழ் மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா நேற்று (21.05.2024) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டத்தில் இடம்பெற்றது.இதில் யாழ்ப்பாண பண்பாட்டினை பறைசார்ற்றும் யாழ். மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட கைந்நூல் வழங்கலும், பாடல் இசைத்தட்டும் வெளியீட்டு வைக்கப்பட்டது.இதில் முதற் பிரதியினை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை வெளியிட்டு வைக்க,யாழ்ப்பாணப் பெட்டகம் நிறுவகத்தின் ஸ்தாபகர் திருமதி விஜிதா பாலதாஸ் அதனை பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கு கைந்நூல்களும், இறுவெட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து வடமாகாண முழுவதும் சமூக அக்கறை கொண்டு மகத்தான பணிகளை முன்னெடுத்து வரும் சமூக நல்லுள்ளங்களுக்கான விருதுகளும், கெளரவிப்பும் வழங்கப்பட்டது.இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் போராசிரியர்களாகிய கலாநிதி ம.கிருஷ்ணராஜா, சண்முகலிங்கன், மற்றும் சமூக நலன்விரும்பிகள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement