• Sep 20 2024

ஜனாதிபதியை சந்தித்த இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்கள்!

Chithra / Aug 7th 2024, 1:32 pm
image

Advertisement


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகர், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சூழவுள்ள கல்வி முக்கியத்துவம் வாய்ந்த விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதற்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் 280 பேர்  நேற்று (06) களப்பயணத்தில் இணைந்து கொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர், ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்கு வாய்ப்வு வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். ஜனாதிபதி தனது வேலைப் பழுவைப் பொருட்படுத்தாமல் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்ததுடன் அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

அவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி சட்டவாக்கம்,நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை தொடர்பில் மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்ததுடன், அவர்களை தெளிவுபடுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

அதனைத்  தொடர்ந்து மாணவர்களுடன் ஜனாதிபதி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் பிம்பா திலகரத்ன, ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.


ஜனாதிபதியை சந்தித்த இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்  இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகர், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சூழவுள்ள கல்வி முக்கியத்துவம் வாய்ந்த விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.அதற்கமைய இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் 280 பேர்  நேற்று (06) களப்பயணத்தில் இணைந்து கொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர், ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்கு வாய்ப்வு வழங்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். ஜனாதிபதி தனது வேலைப் பழுவைப் பொருட்படுத்தாமல் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்ததுடன் அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.அவர்களின் கல்விச் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி சட்டவாக்கம்,நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை தொடர்பில் மாணவர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்ததுடன், அவர்களை தெளிவுபடுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.அதனைத்  தொடர்ந்து மாணவர்களுடன் ஜனாதிபதி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் பிம்பா திலகரத்ன, ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement